கொரோனா வைரசால் உலகமே ஆட்டம் கண்டுள்ளது இந்த நிலையில் இந்தியவைல் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று மட்டும் 110 பேருக்கு கொரோன வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 110 பெரும் தில்லியில் நடந்த இசுலாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கொரோனா தொற்று இருக்கிறதா என ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக, 100-க்கும் மேற்பட்டோர் சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துசெல்லப்பட்டதை அறிந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ராயபுரம் உதவி ஆணையர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















