அடுத்த டார்கெட் பிஜேபிக்கு திருப்பம் தருமா திருப்பதி ?
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவார்கள். இப்பொழுதுதிருப்பதி பிஜேபிக்கு திருப்பம் தருமா என்று தான் தேசிய அளவில் விவாதமாக இருக்கிறது. இப்பொழுது தான் தெலுங்கானாவில் ...
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவார்கள். இப்பொழுதுதிருப்பதி பிஜேபிக்கு திருப்பம் தருமா என்று தான் தேசிய அளவில் விவாதமாக இருக்கிறது. இப்பொழுது தான் தெலுங்கானாவில் ...
சென்னையில் உள்ள நான்காவது காலாட்படை மையத்தில் 10 படுக்கை வசதிகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையும் தனிமைப்படுத்துதல் மையமும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இவற்றைத் தொடங்கி வைத்தார். அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் இந்த தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "கொவிட்- 19 போன்ற சவாலான சூழ்நிலைகளிலும் புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்- கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். "சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்காவது காலாட்படை மையத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலில் மக்களுக்கு ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குவதுடன் 20 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் திறன் கொண்டது," என்று அவர் கூறினார். நவீன, விரைவாக நிறுவக் கூடிய வகையில், பாதுகாப்பான, அனைத்து வானிலை மாற்றங்களுக்கும் ஏற்றவாறு, அவசரகால சூழ்நிலைகளிலும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விரைவில் அமைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய அம்சங்களை இந்த மையங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எளிதில் மடக்கக் கூடியதும், ஒருவர் தமது தோளில் சுலபமாக சுமந்து சென்று மற்றொரு இடத்தில் எளிதில் நிறுவக்கூடிய வகையிலுமாக சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி ஆராய்ச்சிக் கூடங்கள் இதனை வடிவமைத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைகள், சத்தான நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய துரித உணவுகள், எளிதில் வடிவமைக்கக்கூடிய கூரைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு புதுமையான தீர்வுகளை சிஎஸ்ஐஆர் கண்டறிந்து வருவதை அவர் பாராட்டினார். "விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைவீரர்கள் போன்றோரது அயராத உழைப்பினால் இந்தியாவில் இன்று கொரோனா நோயிலிருந்து 92 சதவீதம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள்", என்று அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் திரு எஸ் என் பிரதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி, சென்னை, தலைமை விஞ்ஞானி டாக்டர் பழனி, எஸ்ஈஆர்சி, சென்னை, இயக்குநர் பேராசிரியர் கபூரியா மற்றும் சிஎஸ்ஐஆர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை, சிஎஸ்ஐஆர்- எஸ்ஈஆர்சி-யின் ஒருங்கிணைப் போடு ரூபாய் 37.67 லட்சம் மதிப்பில் சென்னையில் இந்த தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவிகள், பிராணவாயு வழங்கும் சிலிண்டர்கள், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அளவை கணக்கிடும் கருவிகள் போன்றவை அரக்கோணத்தில் உள்ள மையத்தில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கொவிட்-19 நோயால் பாதிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இந்த மையங்கள் அமையும்.
கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு வெளியே உள்ள இடங்களில் மேலும் பல செயல்பாடுகளைத் திறக்க புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் (எம் ஹெச் ஏ) இன்று வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் 1 அக்டோபர் 2020 முதல் நடைமுறைக்கு வரும். இந்த ...
இந்தியாவில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முக்கிய மைல்கல்லான 50 லட்சத்தை (50,16,520) கடந்துள்ளது. அதிக அளவிலான நோயாளிகள் தினமும் குணமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74,893 நபர்கள் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். சமீபத்தில் தினமும் 90,000-க்கும் அதிகமானோர் நாட்டில் குணமடைந்து வந்தனர். கடந்த 11 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகம் ஆகும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குணமடைபவர்களின் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. https://www.youtube.com/watch?v=p4bhm4Vs7b4 தேசிய குணமடைதல் விகிதம் 82.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விட அதிக குணமடைதல்களை 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, கேரளா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்கள் நாட்டின் மொத்த குணமடைதல்களில் 73 சதவீதத்துக்கு காரணாமாக உள்ளன.
அயோத்தியில் பாபர் மசூதி 1528ம் ஆண்டு கட்டப்படுகிறது. இந்த இடம் இந்துக்களால் ராமர் பிறந்ததாக நம்பப்படும் பகுதியாகும். மசூதி கட்டப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அந்த பகுதியில் இரு தரப்பிற்கும் நடுவே மோதல் ராமர் பிறந்த அந்த இடத்தில், கட்டுவதற்கு இந்துக்கள் எதிர்ப்பு. 1853: அயோத்தியில் ...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு ...
திமுக தலைவர் ஸ்டாலின் தேசியக்கொடியை முதல்முறையாக தனது அலுவலகத்தில் ஏற்றினார். அவர் கொடி ஏற்றிய பின்பு வணக்கம் கூட வைக்காத்து குறித்து. சட்டவல்லுனர்கள் விளக்க வேண்டும் என்று ...
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தோற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சீனையிலும் அதன் வீரியம் அதிகமாகியுள்ளது. சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கடந்த ஜூன் 19ம் தேதி ...
கடந்த 24 மணி நேரத்தில், 10,215 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,80,012 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 தொற்று ...
இந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து மே 31 ஆம் தேதி வரை இந்திய ரயில்வே 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் ஏப்ரல் ...