Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

Oredesam by Oredesam
November 5, 2020
in இந்தியா
0
சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள நான்காவது காலாட்படை மையத்தில் 10 படுக்கை வசதிகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையும் தனிமைப்படுத்துதல் மையமும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இவற்றைத் தொடங்கி வைத்தார்.

READ ALSO

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் இந்த தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது.

          நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “கொவிட்- 19 போன்ற சவாலான சூழ்நிலைகளிலும் புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்- கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்காவது காலாட்படை மையத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலில் மக்களுக்கு ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குவதுடன் 20 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் திறன் கொண்டது,” என்று அவர் கூறினார். நவீன, விரைவாக நிறுவக் கூடிய வகையில், பாதுகாப்பான, அனைத்து வானிலை மாற்றங்களுக்கும் ஏற்றவாறு, அவசரகால சூழ்நிலைகளிலும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விரைவில் அமைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய அம்சங்களை இந்த மையங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எளிதில் மடக்கக் கூடியதும், ஒருவர் தமது தோளில் சுலபமாக சுமந்து சென்று மற்றொரு இடத்தில் எளிதில் நிறுவக்கூடிய வகையிலுமாக சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி ஆராய்ச்சிக் கூடங்கள் இதனை வடிவமைத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைகள், சத்தான நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய துரித உணவுகள், எளிதில் வடிவமைக்கக்கூடிய கூரைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு புதுமையான தீர்வுகளை சிஎஸ்ஐஆர் கண்டறிந்து வருவதை அவர் பாராட்டினார்.

“விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைவீரர்கள் போன்றோரது அயராத உழைப்பினால் இந்தியாவில் இன்று கொரோனா நோயிலிருந்து 92 சதவீதம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள்”, என்று அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் திரு எஸ் என் பிரதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

சிஎஸ்ஐஆர்-எஸ்ஈஆர்சி, சென்னை, தலைமை விஞ்ஞானி டாக்டர் பழனி,  எஸ்ஈஆர்சி, சென்னை, இயக்குநர் பேராசிரியர் கபூரியா  மற்றும்  சிஎஸ்ஐஆர், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை, சிஎஸ்ஐஆர்- எஸ்ஈஆர்சி-யின் ஒருங்கிணைப் போடு ரூபாய் 37.67 லட்சம் மதிப்பில் சென்னையில் இந்த தனிமைப்படுத்துதல் மையத்தை அமைத்துள்ளது. இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவிகள், பிராணவாயு வழங்கும் சிலிண்டர்கள், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அளவை கணக்கிடும் கருவிகள் போன்றவை அரக்கோணத்தில் உள்ள மையத்தில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கொவிட்-19 நோயால் பாதிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இந்த மையங்கள் அமையும்.

ShareTweetSendShare

Related Posts

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023
மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…
இந்தியா

மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

February 11, 2023
குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022
பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !
இந்தியா

பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

November 17, 2022
இந்தியா

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் நிர்வாகி கைது.

November 16, 2022
ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.
இந்தியா

ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல- ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.

November 16, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தி.மு.கவை வதம் செய்வோம் பா.ஜ.க இளைஞரணி மாநிலத்தலைவர் வினோஜ் செல்வம் சூளுரை

இந்தி படித்தால் தமிழ் அழியாது தி.மு.க தான் அழியும்! திமுக நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம்! பாஜக இளைஞரணி தலைவர் அதிரடி!

September 5, 2020
இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஐரோப்பிய ஒன்றியத்தினை கலங்க செய்த அறிவிப்பு! இது எப்படி இருக்கு!

பா.ஜ.க தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் 12 கட்டளை! மக்கள் சேவையில் நமக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை

July 25, 2021
பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்!  ஆ.ராசாவின் ஆணவ பேச்சு!

பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்! ஆ.ராசாவின் ஆணவ பேச்சு!

January 4, 2022
1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

பிரதமர் மோடி-அமித்ஷா கூட்டணியின் அடுத்த டார்கெட் பாகிஸ்தான்.

September 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x