“ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது திருச்சி சிவா அதிருப்தி.!
மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 14ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ள மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். https://www.youtube.com/watch?v=KFuTO13QbBg இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ்சிங் கின் எம்.பி பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றதையடுத்து அப்பதவி காலியானது. மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் சிங் மீண்டும் பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். அவரையே துணைத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வேட்பாளராக்க முடிவு செய்ததாகவும் ஆனால் வெற்றி உறுதியாக இல்லாத நிலையில் எப்படி திமுக போட்டியிடுவது என்றும் கூறப்படுகிறது. மேலும் “ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது என திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திருச்சி சிவா முக்கிய நிர்வாகிகளுடன் சென்னையில் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=OY7SBsbiO9o&t=1s கட்டுரை : எழுத்தாளர் சுந்தர்.