கடந்த சில காலமாக இந்தியாவை நேரடியாக, மறைமுகமாக டிரம்ப் தாக்கி பேசி வந்தார். இந்தியாவை சீண்டிக்கொண்டு இருந்த அவருக்கு.. இப்போது அவரின் சொந்த நாட்டிற்கு உள்ளேயே பெரிய பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் அரசியலில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் கூக்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், நேற்று டிம் கூக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் காட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.
இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம். நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம். ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார். ண்டிரம்ப் சொல்லி ஒரு வாரத்தில் ஆப்பிள் துணை நிறுவனம் 12800 கோடியை இந்தியாவில் முதலீடு செய்தது.
\
இந்திய அமெரிக்கா போர் பற்றி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா – பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில்பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம், என்று கூறினார். இதற்கு நமது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் பாகிஸ்தான் தான் இந்தியாவிடம் கெஞ்சியது அதனால் தான் போரை நிறுத்தினோம் என் ஆக்கூரினே எந்த மூன்றாவது நாடும் மூக்கைநுழைக்கவில்லை என பதிலடி தந்தார். உடனே அமெரிக்க அதிபர் டிரம்ப் போரை நிறுத்துவதற்கு முழுமையாக உதவவில்லை என பல்டி அடித்தார்.
இப்படி இந்தியாவை சீண்டிக்கொண்டு இருந்த அவருக்கு.. இப்போது அவரின் சொந்த நாட்டிற்கு உள்ளேயே பெரிய பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
உதாரணமாக அதிபர் டிரம்ப் – டெஸ்லா எலான் மஸ்க் இடையிலான மோதல் அதிகாரமிக்க வாஷிங்டன் அரசியல் வட்டத்திற்குள் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ளது. பல்வேறு ரகசியங்களை தெரிந்த மஸ்க் உடன் டிரம்ப் மோதி இருப்பது.. அமெரிக்க அரசியலில், ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் நேரடியாக எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு கொடுத்தார். அதோடு அதிபர் தேர்தலில் டிரம்ப்பிற்கு நிதி வழங்கினார். அந்த தேர்தலில் டிரம்ப் ஜெயிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக டிரம்ப் மாறினார்.
ஆனால் அந்த புதிய உறவு, நட்பு எல்லாம், ஒரு குறுகிய காலமே நீடித்தது. ஜூன் முதல் வாரத்தில், அதே நட்பு பெரிய கசப்பாக மற்றும் துரோகமாக வெடித்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரரின் ஈகோ, உலகின் சக்திவாய்ந்த தலைவரின் பிடிவாதத்துடன் மோதியது. மஸ்க் ஈகோ பிடித்தவர்.. டிரம்ப் கோபக்காரர். இவர்கள் இருவரும் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும். அதுதான் நம்ம ராமதாஸ் – அன்புமணி மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? அதாவது தக் லைஃப் கமல் – சிம்பு மோதல் போல.. அப்படித்தான் இதுவும்.
கடந்த ஜூன் 3 அன்று, டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதாவை மஸ்க் பகிரங்கமாக விமர்சித்தார். மேலும் இது நாட்டின் கடனை அதிகரிக்கும் என்றும் கூறினார். அவரது சமூக ஊடக பதிவுகள் குடியரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களுக்கு டிரம்ப் பதிலளிக்கவில்லை. ஜூன் 5 அன்று, டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மஸ்க் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் மஸ்க் அந்த மசோதாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி விலக்குகளை நீக்கியதால் கோபமடைந்துள்ளதாகக் கூறினார்.
டிரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் போதே, மஸ்க் கோபத்துடன் எக்ஸ் தளத்தில் பதிலளித்தார். “நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்று இருப்பார்.. அவர் நன்றி கேட்டவர்” என்று பதிவிட்டார். இதற்கு உடனே டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், மஸ்கின் வணிக சாம்ராஜ்யத்தை குறிவைத்து ஒரு கருத்தை வெளியிட்டார். “நமது பட்ஜெட்டில் பணத்தை சேமிக்க எளிதான வழி, எலான் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதுதான்” என்று அவர் எழுதினார். “தைரியமிருந்தால் இதைச் செய்யுங்கள்” என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிலளித்தார்.
உள்நாட்டு பிரச்சனை – 2
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம்.. அமெரிக்காவில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் உள்நாட்டு போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கலிபோர்னியா மாகாணத்திற்கும், அதன் மேயருக்கும் – அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் இடையிலான மோதலாக வெடித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பென்டகன் 700 மரீன் வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து கலிபோர்னியா மாகாணம், ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு ட்ரம்ப்தான் காரணம் என்று புகார் வைத்துள்ளது.
கலவரத்திற்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE), லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை குறிவைத்து பல அதிரடி சோதனைகளை நடத்தியது. இதற்கு பதிலடியாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கலிபோர்னியாவின் முக்கிய இடங்களில் கூடினர். அமைதியாக தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.
ட்ரம்ப் வெளியிட்ட சமீபத்திய குடியேற்ற நெறிமுறைகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் குடியேற கடுமையான கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சோதனைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பணியிட சோதனைகள் மற்றும் விரைவான நாடு கடத்தல் உத்தரவுகள் அடங்கும். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக மெக்சிகோவை சேர்ந்த மக்கள்தான் இங்கே அதிகம் போராடி வருகிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், காம்ப்டன் மற்றும் பாரமவுண்ட் நகர மையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ், வெளியுறவு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். 101 நெடுஞ்சாலையை மறிப்பது, வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது, வேமோ கார்கள் கூட எரிக்கப்பட்டன, கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.