Tag: INDIA NEWS

பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

சித்து விளையாட்டால் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி டமால் !

வெற்றியை தோல்வியாக மாற்றும் ரகசியம் - காங்கிரஸ் மட்டுமே அறியும் !1, கேரளாவில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் என மாறி மாறி ஆட்சி வரும் வழக்கத்தை மாற்றி ...

மத்திய அரசு விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கை.

மத்திய அரசு விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கை.

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளதுஆம், மதிப்பிற்குரிய ரவிந்திர நாராயணன் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார் இது மிக ...

பல லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்திற்கு தேவையா மேலவை! மக்கள் வரிப் பணத்தை வீணாக்கும் முயற்சி! கிருஷ்ணசாமி

விநாயகர் சதுர்த்தியும் இந்தியாவின் விடுதலையும் ! விநாயகர் சிலை வழிபாட்டை முன்னெடுத்தவர் ’பாலகங்காதர திலகர்

மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து, இந்திய மண்ணை அபகரித்துக் கொண்ட துருக்கியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள்; கிபி 1500-க்கு பிறகு ஐரோப்பியாவில் இருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமித்த போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ...

இலங்கை தமிழர் நலனில் பிரதமர் மோடி ! புள்ளி விவரங்களுடன் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இலங்கை தமிழர் நலனில் பிரதமர் மோடி ! புள்ளி விவரங்களுடன் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் அதிக ...

ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

பாலியல் சர்ச்சை விவகாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்.

இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த,செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட ...

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியின் மேல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் ...

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது.  எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

தரமான சம்பவம் செய்த யோகி அரசு.

உதிர்ப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் செய்துவருகின்றது.அதேபோல் தற்பொழுதும் ஒரு தரமான செயலை செய்துள்ளது. கடந்த 1920 ஆம் ...

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் என்னென்ன ?

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் என்னென்ன ?

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மக்களவையில்  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு.ஏ.நாராயணசாமி, சுஷ்ரி பிரதிமா பூமிக் ஆகியோர் எழுத்துபூர்வமாக இன்று பதில் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:  மத்திய அரசின் நேரடி வேலைவாயப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக நீதியை உறுதி செய்ய, ஓபிசி மாணவர்களுக்கு மெட்ரிக் வகுப்புகுகளுக்கு முன்னும், பின்னும் கல்வி உதவித் தொகைகள், வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடனில் வட்டி மானியம் அளிக்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம், தேசிய அளவிலான ஆராய்ச்சி உதவித் தொகை, மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் கட்டித் தருதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் உதவி, தொழில் தொடங்க மூலதன நிதி, குறைந்த வட்டியுடன் கூடிய கடனுதவி திட்டங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மத்திய வேலை வாய்ப்பு மற்றம் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. போதை மறுவாழ்வு மையங்களில் ஆய்வு: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இ-அனுதான் இணையதளம் (https://grants-msje.gov.in) தகவல்படி, 2019-20-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள 65 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களில், மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களின் பரிந்துரைப்படி அந்த அமைப்புகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நிதிவழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியர்களுக்கான ஒதுக்கீடு: தற்போதுள்ள பட்டியலினத்தனர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத ஒதுக்கீடு உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மிசோரம், தில்லி, ஜம்மு காஷ்மீர், கோவா, அசாம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதன் விவரம் கிடைக்கவில்லை. மத்திய அரசின் 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணித்து, காலியிடங்களை நிரப்பி வருகிறது. அவற்றின் விவரம் இணைப்பில் -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுக்கும் குழந்தைகள்: இந்தியப் பதிவாளர் இணையளத்தில் உள்ள தகவல் அடிப்படையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 29,237-ஆக உள்ளது.  பிச்சை எடுப்பவர்களுக்கான திட்டங்கள்: நலிவடைந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு உதவ, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ‘ஸ்மைல்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பிச்சை எடுப்பவர்களின் மறுவாழ்வக்கான துணைத் திட்டமும் உள்ளது.  இதில் பிச்சை எடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மருத்துவ வசதி அளிப்பது, ஆலோசனை வழங்குவது, கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கார்பரேஷனுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1.50 கோடியை வழங்கியுள்ளது. பிச்சை எடுத்து வந்த 514 பேருக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.182 கோடி ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு:  மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுபவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் இன்னமும் இருப்பதாக சில தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கான ஆதாரங்களை நிருபிக்க முடியவில்லை.  கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 309 பேர் கடந்த 5 ஆண்டுகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கைகளால் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மாநிலம் வாரியாக இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் கைகளால் கழிவுகளை அகற்றும் இரு துப்புரவு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது,  2013-ஆம் ஆண்டுக்கு முன், கைகளால் கழிவுகளை அகற்றிய  துப்புரவுத் தொழிலாளர்களின்  விவரம்: 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக கைகளால் கழிவுகளை அற்றிய தொழிலாளர்கள் மாநில வாரியாக இணைப்பு-1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், நிதியுதவி அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இதில் இடம் பெற்றள்ளது. மராத்தா பிரவினருக்கான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ரத்து செய்தது. அரசியல் சாசன திருத்தப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் இல்லை என கூறியது. இந்த பட்டியலைப் பராமரிக்கும் மாநிலங்களுக்கான அதிகாரத்தைத் திரும்ப பெற, அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.183.67 கோடி விநியோகம்.

தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.183.67 கோடி விநியோகம்.

2021-22-ஆம் ஆண்டிற்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆர்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில், ரூ.183.67 கோடியும், 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.918.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று விடுவித்தது. இந்த 5-ஆவது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.49,355 கோடி, தகுதி பெற்றுள்ள மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 275-ஆவது பிரிவின்படி இந்த பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிர்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியைப் போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன. 17 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது. பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,452 கோடியை 17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் வழங்க வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 49,355 கோடி ‌(41.67%) இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்துக்கு 15-ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம்.

Page 2 of 9 1 2 3 9

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.