சீனா தான் ஒரு வல்லரசு என நம்புகின்றது, அதை உலகை நம்ப வைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றது.
சீனா தான் ஒரு வல்லரசு என நம்புகின்றது, அதை உலகை நம்ப வைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றது. ஆப்கனில் தாலிபான்கள் கை ஓங்கும் நேரம் அவர்கள் ஆட்சிக்கு ...
சீனா தான் ஒரு வல்லரசு என நம்புகின்றது, அதை உலகை நம்ப வைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றது. ஆப்கனில் தாலிபான்கள் கை ஓங்கும் நேரம் அவர்கள் ஆட்சிக்கு ...
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ...
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், பல மாநிலங்களில் போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அனைத்து ...
தமிழகத்தில் சாராய கடைகளை திறந்த ஒரே நாளில் 165 கோடிக்கு சாராயத்தை தமிழ் மக்களுக்கு திமுக அரசு விற்பனை செய்திருக்கிறது. 30 நாள்களுக்கு மேல் ஊரடங்கில் இருக்கும் ...
கடந்த திங்கள் அன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடை திமுக அரசால் திறக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் நிர்வாகிகள் அவர் அவரது ...
2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 3 நிதியாண்டுகளாக தேக்க நிலையில் இருந்த வேளாண் மற்றும் துணை பொருட்களின் ஏற்றுமதி (கடல்சார் பொருட்கள் மற்றும் தோட்ட பொருட்கள் உட்பட) 2020-21ம் நிதியாண்டில் 41.25 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது 17.34 சதவீத வளர்ச்சி. 2019-20ம் ஆண்டில், ரூ.2.49 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில் ரூ.3.05 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 22.62 சதவீத வளர்ச்சி. இந்தியாவின் வேளாண் மற்றும் துணை பொருட்களின் இறக்குமதி கடந்த 2019-20ம் ஆண்டில், 20.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020-21ம் ஆண்டில் இது 20.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கொவிட் தொற்றுக்கு இடையிலும் வர்த்தக சமநிலை 14.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20.58 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 42.16 சதவீத வளர்ச்சி. கடல்சார் மற்றும் தோட்ட பொருட்கள் தவிர இதர வேளாண் பொருட்கள் கடந்த 2020-21ம் ஆண்டில் 29.81 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.36 சதவீத வளர்ச்சி. கொவிட்-19 தொற்று காலத்தில், முக்கிய உணவு பொருட்களின் தேவை அதிகரித்ததை, இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. https://www.youtube.com/watch?v=gW2_uspZpgY உணவு தானியங்களின் ஏற்றுமதியும் அதிக வளர்ச்சி கண்டது. பாசுமதி வகை அல்லாத அரிகளின் ஏற்றுமதி மதிப்பு 4794.54 மில்லியன் அமெரிக்க டாலர். இது 136.04 சதவீத வளர்ச்சி. கோதுமை 549.16 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 774.17 சதவீத வளர்ச்சி. கம்பு, சோளம் போன்ற இதர உணவு தானியங்களின் ஏற்றுமதி 694.14 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 238.28 சதவீத வளர்ச்சி. இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியும், கடந்த 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. புண்ணாக்கு வகைகள் 1675.34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 90.28 சதவீத வளர்ச்சி. சர்க்கரை 2789.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், பருத்தி 1897.20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், காய்கறிகள் 721.47 மில்லியன் டாலருக்கும், சமையல் எண்ணெய் 602.77 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி 254.39 சதவீதம். இந்திய வேளாண் பொருட்களை அமெரிக்க, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தோனேஷியாவுடனான ஏற்றுமதி வளர்ச்சி 102.42 சதவீதமாகவும், வங்கதேசத்துடனான வளர்ச்சி 95.93 சதவீதமாகவும், நேபாளத்துடனான வளர்ச்சி 50.49 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ...
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 28000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,628 டேங்கர்களில் சுமார் 28,060 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=QGHOMU_X8XY 397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 டேங்கர்களில் சுமார் 494 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 5 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு 3900 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு முறையே 3100 மற்றும் 3400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. https://www.youtube.com/watch?v=Y-UVIylqlg0 இதுவரை தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3450 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 3130 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2765 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ● தென்மேற்கு பருவமழை, இன்று மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனையொட்டிய கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி, சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில இடங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19-ஐ எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு தொகுப்பு காப்பீட்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தின் கீழ் ...
2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ₹ 1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ₹ 17,592 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ₹ 22,653 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ₹ 53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ் ₹ 9,265 கோடியாகவும் (சரக்கு ...