பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களிடையே நடந்த கலந்துரையாடல் தமிழில்.
இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர், வாருங்கள் இவருடைய அனுபவம் என்ன, தெரிந்து கொள்வோமா? சொல்லுங்க ராம்.... ராம்கம்பா தேஜா: வணக்கம் ஐயா. மோதிஜி: ராம் அவர்கள் தானே ...
இவர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர், வாருங்கள் இவருடைய அனுபவம் என்ன, தெரிந்து கொள்வோமா? சொல்லுங்க ராம்.... ராம்கம்பா தேஜா: வணக்கம் ஐயா. மோதிஜி: ராம் அவர்கள் தானே ...
எனதருமை நாட்டுமக்களே, பொதுவாக மனதின் குரலில் நான் பல விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்து தருவேன். ஆனால் இன்றோ, நாட்டிலும் சரி, உலகில் உள்ளோர் மனங்களிலும் சரி, ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அடர்ந்த வனப்பகுதியில் ...
தேசத்திற்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொடிய வுஹான் கொரோனா வைரஸை பரப்புவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியாவை முழுமையாக பூட்டுவதாக அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 606 கோவிட் ...
இந்தியா மட்டுமல்ல உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி பல உயிர்களை கிட்டத்தட்ட 18,000 உயிர்களை கொன்று வருகிறது . இந்தியாவும் கொரோனா வைரஸின் பிடியில் வர கூடாது என்பதற்காக ...
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். 11 மொழிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகையாளர்கள் 14 இடங்களில் இருந்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். செய்திகளை நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பரப்பும் அளப்பரிய பங்களிப்பை ஊடகங்கள் செய்துவருவதாக பிரதமர் கூறினார். ஊடக கட்டமைப்பு இந்தியா முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவியுள்ளதாக அவர் கூறினார். இந்தக் கட்டமைப்பு, ஊடகங்கள் சரியான தகவலை சிறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று, சவாலுக்கு எதிரான போராட்டத்தை முக்கியத்துவம் வாயந்ததாக மாற்றியுள்ளது. செய்தித்தாள்கள் பெரும் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளன என்றும், ஒவ்வொரு பத்திரிகையின் உள்ளூர் பக்கம் ஏராளமானவர்களால் அதிகமாக வாசிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். எனவே, இந்தப் பக்கத்தில் வெளியாகும் கொரோனோ வைரஸ் பற்றிய கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு பரப்பப்படுவது அவசியமாகிறது. பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன, அங்கு யார் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், யாரை அணுக வேண்டும், வீட்டில் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற தகவல்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தகவல்கள் செய்தித்தாள்களிலும், அவற்றின் இணையதள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஊரடங்கு, தடை உத்தரவு போன்ற சமயங்களில் ,அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் பக்கங்களில் இடம்பெற வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பு பாலமாகச் செயல்பட்டு, தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் தொடர்ச்சியான தகவல்களைத் தரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி, மாநில அரசுகளின் ஊரடங்கு, அடைப்பு உத்தரவுகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வைரஸ் பரவுவதால் ஏற்படும் பாதிப்புக்களை சர்வதேச தரவுகள், பிறநாடுகளின் ஆராய்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொற்றுக்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டிய பிரதமர், வதந்திகள் , அவநம்பிக்கை, எதிர்மறை தகவல்கள் பரவுவதைச் சமாளிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். கொவிட் -19 தாக்கத்தை முறியடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். பிரதமர் தமது எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தி நாட்டை முன்னணியில் வழிநடத்திச் செல்வதாக, அச்சு ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ளவர்கள் பாராட்டினர். ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற பிரதமரின் யோசனைகளைச் செயல்படுத்த பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்தனர். அச்சு ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தத் தீவிரமான சவாலை ஒன்று சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறைகூவலை நாடு முழுவதும் பின்பற்றுவதாக அவர்கள் கூறினர். கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் அளித்த தகவல்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடைக்கோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக பொறுப்புணர்வை மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். நமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது கட்டாயம் என அவர் அறிவுறுத்தினார். அரசின் தீவிரக்கண்காணிப்பு, நடவடிக்கை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, பீதி பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்காக பத்திரிகையாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர் நன்றி தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில் தவறான தகவல்கள் பரவுவதை அச்சு ஊடகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நாடு முழுக்க 17 மாநிலங்களில் இருந்து ஏப்ரல் 2020 உடன் ஓய்வுபெறும் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் 25.02.2020ல் அறிவித்தது. 06.03.2020 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 318/CS-Multi/2020(1) -ன்படி அந்த அறிவிப்பு வெளியானது. வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி 18.03.2020ல் நிறைவடைந்த நிலையில், 10 மாநிலங்களில் இருந்து 37 இடங்களுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்போது, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து 18 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 26.03.2020 (வியாழக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும். 30.03.2020 (திங்கள்கிழமை) தேதிக்குள் தேர்தல் பணிகள் முடிக்கப்பட வேண்டும். இதற்கிடையில், 11.03.2020 தேதியன்று, கோவிட் 19-ஐ உலக அளவிலான தீவிர நோய்த் தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவிக்கை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவை, கோவிட் 19 கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. 22.03.2020 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டின் மூலம், கோவிட் - 19 சங்கிலித் தொடரில் பிணைப்புகளை உடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள் உள்பட அனைத்து ரயில் சேவைகளையும் 31.03.2020 வரையில் ரத்து செய்வது, மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு, மருந்துக் கடைகள், மளிகை பொருள் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். அதன் தொடர்ச்சியாக, 24.03.2020 அன்று 23.59 ஐ.எஸ்.டி. நேரத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயங்காது என்று 23.03.2020 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கோவிட் - 19 கையாளுதல் மற்றும் கட்டுப்படுத்துதலுக்கு வசதியாக உள்ளூர் போக்குவரத்து வசதிகளை முடக்குவது குறித்து மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில், கோவிட் - 19 பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த விஷயங்களை தேர்தல் ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது. எதிர்பாராத, இப்போதைய பொது சுகாதார அவசர சூழ்நிலைகள், எந்த வகையிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு செய்வது, அதில் ஈடுபடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்குறிப்பிட்ட தேர்தல்களுக்கான தேர்தல் நடைமுறைகளில், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள், ஆதரவு நிலை அதிகாரிகள், அந்தந்த சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் வாக்குப் பதிவு நாளன்று ஓர் இடத்தில் கூட வேண்டிய அவசியம் ஏற்படும். இப்போது நிலவும், முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையில், அரசின் அறிவுறுத்தல்களின்படி, இது உகந்ததாக இருக்காது என்று கருதப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 153ன்படி, உரிய காரணங்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கையில், பிரிவு 39ன் துணைப் பிரிவு (1) அல்லது பிரிவு 30ன் கீழ் தேவையான திருத்தங்கள் செய்வதன் மூலம், எந்தத் தேர்தலையும் நிறைவு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கலாம் என வகை செய்யப்பட்டுள்ளது; அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் பிரிவு 153ன்படி, இந்தத் தேர்தலை ஆணையம் தள்ளி வைத்து, அதை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலின்படி, மேற்படி அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, இந்தத் தேர்தலின் மீதி பணிகள் நிறைவு செய்யப்படும். வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான புதிய தேதிகள், சூழ்நிலைகளை ஆய்வு செய்து பின்னர் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.
கொரோனோ வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) 2020 மார்ச் 31-ம்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலை ராயலா டவர்சில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தட்கல் கவுண்டர் மற்றும் விசாரணை கவுண்டர்களும் மூடப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ,பின்வரும் ஆலோசனைகளை அலுவலகம் வழங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தட்கல் மையங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.வருகையை மாற்றியமைக்க கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இயல்பு நிலை திரும்பும்வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் , வருகையை மாற்றிக்கொள்ளலாம்.ராயலா டவர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களும், தங்கள் வருகையை மார்ச் 31-க்குப் பின்னர் வேறு எந்த தேதிக்காவது தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இதுபற்றிய அனைத்து விவரங்களுக்கும் மக்கள் 044- 28513639, 044-28513640 ஆகிய எண்களையோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளத்திற்கோ தொடர்பு கொள்ளலாம். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி திரு. அசோக் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்த வுஹான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் விரைவாக அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பதிவாகியுள்ளன, மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது, தொடர்ந்து கேரளாவும் ...
சீனாவில் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் 'கொரோனா வைரஸ்' இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முழு மூச்சுடன் போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசை ...