Tag: INDIA

மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

நாடு முழுக்க 17 மாநிலங்களில் இருந்து ஏப்ரல் 2020 உடன் ஓய்வுபெறும் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் 25.02.2020ல் அறிவித்தது. 06.03.2020 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 318/CS-Multi/2020(1) -ன்படி அந்த அறிவிப்பு வெளியானது.  வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி 18.03.2020ல் நிறைவடைந்த நிலையில், 10 மாநிலங்களில் இருந்து 37 இடங்களுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்போது, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து 18 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 26.03.2020 (வியாழக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும். 30.03.2020 (திங்கள்கிழமை) தேதிக்குள் தேர்தல் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.             இதற்கிடையில், 11.03.2020 தேதியன்று, கோவிட் 19-ஐ உலக அளவிலான தீவிர நோய்த் தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவிக்கை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவை, கோவிட் 19 கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.  22.03.2020 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டின் மூலம், கோவிட் - 19 சங்கிலித் தொடரில் பிணைப்புகளை உடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள் உள்பட அனைத்து ரயில் சேவைகளையும் 31.03.2020 வரையில் ரத்து செய்வது, மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு, மருந்துக் கடைகள், மளிகை பொருள் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். அதன் தொடர்ச்சியாக, 24.03.2020 அன்று 23.59 ஐ.எஸ்.டி. நேரத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயங்காது என்று 23.03.2020 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கோவிட் - 19 கையாளுதல் மற்றும் கட்டுப்படுத்துதலுக்கு வசதியாக உள்ளூர் போக்குவரத்து வசதிகளை முடக்குவது குறித்து மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில், கோவிட் - 19 பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.             இந்த விஷயங்களை தேர்தல் ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது. எதிர்பாராத, இப்போதைய பொது சுகாதார அவசர சூழ்நிலைகள், எந்த வகையிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு செய்வது, அதில் ஈடுபடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்குறிப்பிட்ட தேர்தல்களுக்கான தேர்தல் நடைமுறைகளில், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள், ஆதரவு நிலை அதிகாரிகள், அந்தந்த சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் வாக்குப் பதிவு நாளன்று ஓர் இடத்தில் கூட வேண்டிய அவசியம் ஏற்படும். இப்போது நிலவும், முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையில், அரசின் அறிவுறுத்தல்களின்படி, இது உகந்ததாக இருக்காது என்று கருதப்படுகிறது.             மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 153ன்படி, உரிய காரணங்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கையில், பிரிவு 39ன் துணைப் பிரிவு (1) அல்லது பிரிவு 30ன் கீழ் தேவையான திருத்தங்கள் செய்வதன் மூலம், எந்தத் தேர்தலையும் நிறைவு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கலாம் என வகை செய்யப்பட்டுள்ளது; அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் பிரிவு 153ன்படி, இந்தத் தேர்தலை ஆணையம் தள்ளி வைத்து, அதை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலின்படி, மேற்படி அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, இந்தத் தேர்தலின் மீதி பணிகள் நிறைவு செய்யப்படும். வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான புதிய தேதிகள், சூழ்நிலைகளை ஆய்வு செய்து பின்னர் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.

பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படும்

பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடப்படும்

கொரோனோ வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) 2020 மார்ச் 31-ம்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலை ராயலா டவர்சில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தட்கல் கவுண்டர் மற்றும் விசாரணை கவுண்டர்களும் மூடப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ,பின்வரும் ஆலோசனைகளை அலுவலகம் வழங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தட்கல் மையங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.வருகையை மாற்றியமைக்க கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இயல்பு நிலை திரும்பும்வரை, எத்தனை முறை  வேண்டுமானாலும் , வருகையை மாற்றிக்கொள்ளலாம்.ராயலா டவர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களும், தங்கள் வருகையை மார்ச் 31-க்குப் பின்னர் வேறு எந்த தேதிக்காவது தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இதுபற்றிய அனைத்து விவரங்களுக்கும் மக்கள் 044- 28513639, 044-28513640 ஆகிய எண்களையோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளத்திற்கோ தொடர்பு கொள்ளலாம். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி திரு. அசோக் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பினால் 6 மாதங்கள் சிறையில்.

கொரோனா வைரஸ் பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பினால் 6 மாதங்கள் சிறையில்.

நாட்டில் மொத்த வுஹான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் விரைவாக அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பதிவாகியுள்ளன, மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது, தொடர்ந்து கேரளாவும் ...

உலகிற்கே வழிகாட்டும் இந்தியா! உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர்

உலகிற்கே வழிகாட்டும் இந்தியா! உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர்

சீனாவில் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் 'கொரோனா வைரஸ்' இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முழு மூச்சுடன் போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசை ...

கொரானா மூன்றாவது ஸ்டேஜ் முடியப்போகிறதா?

கொரானா மூன்றாவது ஸ்டேஜ் முடியப்போகிறதா?

நியூயார்க்கில் கொரானாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பாருங்கள்...இது தான் 3 வது ஸ்டேஜ். கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் பல தரப்பட்ட மக்களிடையே உருவாகும் தொடுதலால் ஏற்படக்கூடிய பரவல். இதுதான் டேஞ்ச ...

படுத்து போராடிய பங்கு தந்தையின் தலையில் “நச்”..! மொத்த நிலமும் ஆக்கிரமிப்பு

அரசு நிலத்தை மொத்தமாக ஆட்டையை போட்ட கிறிஸ்தவ பாதிரியார்…முதலில் 20 சென்ட் இடத்தை மட்டுமே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக உள்ள நிலையில் மொத்தமாக 2 1/2 ஏக்கர் நிலத்தை ...

“Janata Curfew ஏன்?. கொரோனா வைரஸின் ஒரே இடத்து ஆயுட்காலம் சுமார் 12 மணி நேரம்”

கொரோனா பற்றிய பிரதமரின் உரையில் மறைந்திருக்கும் அறிவியல்பூர்வமான உண்மை, உள் அர்த்தம் - அமில சோதனைக்கு (Acid Test) நிகரானது எனலாம். வரும் ஞாயிறு (22.03.2020) அன்று ...

இத்தாலியில்  கொரோனாக்கு காரணம் ! சீனர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தது !

இந்தியாவில் கொராணா இன்றைய நிலவரம்

இந்தியாவில் இதுவரை கொவிட்-19 நோய் தொற்று 195 பேருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 32 பேர் வெளிநாட்டவர்கள். மத்திய அரசு வெளியிட்டுள்ள இன்று (20.03.2020) காலை ...

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

ஸ்டாலின் குடும்பத்துக்கு ஆடிட்டர், மருத்துவர், வக்கீல், தொழில் பார்ட்னர்கள் என பல பிராமண நண்பர்கள் உண்டு.

ஆனால் அவர் பொது மேடையில் பிராமண ஜாதிகளை பாராட்ட மாட்டார்கள். அவர் கட்சி சார்ந்தவர்களையும் பாராட்ட விட மாட்டார்கள். திட்டுவார்கள், அல்லது திட்ட அனுமதிப்பார்கள். இதுதான் ஆர்க்யூமெண்ட். ...

வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் பிரதமர் நரேந்திரமோதி வேண்டுகோள்.

அடுத்த சில நாட்கள் / வாரங்களுக்கு அத்தியாவசியமான காரணம் தவிர்த்து பிற காரணங்களுக்காக தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்துகள்/ உபாயங்கள் ...

Page 137 of 143 1 136 137 138 143

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x