பாஜகவில் அடுத்த அதிரடி கவர்னராக தமிழக பாஜக மூத்ததலைவர் நியமனம்.
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த ...
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த ...
கடந்த ஆண்டு வரை சீனாவின் பேச்சை கேட்டு இந்தியாவுடன் மல்லுக்கு நின்ற நேபாளம் இப்பொழுது அன்டை நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதல் மரியாதை இதை சீனாவுக்கு அளிக்க ...
தபால் ஆயுள் காப்பீடு / ஊரக தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளை விற்பதற்காக குழு அமைப்பதற்கு / நேரடி முகவர்களை ஈடுபடுத்துவதற்கு நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கீழ்கண்ட ...
நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இணைந்த எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு, எரிவாயு மானியம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 29.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களில், 27.7 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தில் இணைந்துள்ளனர். மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக இவர்களின் விவரம் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. எல்பிஜி மானியம், தானியங்கி முறையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு 2 முதல் 3 வேலைநாட்கள் ஆகும். இயற்கை எரிவாயு சேவைகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள்: நாட்டில் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) சேவைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, ஏலம் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்கள், 8 முதல் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும், 8181 சிஎன்ஜி நிலையங்களை அமைக்கும். இதன் விலைகள் சந்தை நிலவரப்படி தீர்மானிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க முயற்சி: தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சுரங்க பகுதிகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வாகன எரிபொருளில், இயற்கை எரிவாயுவின் பங்கு அதிகரிக்க உதவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
2021-22-ஆம் ஆண்டிற்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆர்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில், ரூ.183.67 கோடியும், 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.918.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று விடுவித்தது. இந்த 5-ஆவது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.49,355 கோடி, தகுதி பெற்றுள்ள மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 275-ஆவது பிரிவின்படி இந்த பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிர்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியைப் போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன. 17 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது. பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,452 கோடியை 17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் வழங்க வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 49,355 கோடி (41.67%) இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்துக்கு 15-ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம்.
அஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக அஞ்சல் துறை பல்வேறு கூடுதல் வசதிகளை, கட்டணமின்றி அளித்து வருகிறது. ஏடிஎம் அட்டை: கட்டணமின்றி வழங்கப்படும் இந்த ஏடிஎம் ...
கடந்த 3 ஆண்டுகளில், மொத்தம் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார். அவர் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நாட்டில் மின்சார வாகனங்களுக்கு விரைவில் மாறவும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India (FAME India) ஃபேம் இந்தியா திட்டம் 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது இரண்டாவது ஃபேம் இந்தியா திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான மொத்த பட்ஜெட் உதவி ரூ.10,000 கோடி. இந்த இரண்டாவது கட்டத்தில் 7090 மின்சார பஸ்கள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 மின்சார கார்கள், 10 லட்சம் 2 சக்கர மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களை தயாரிக்க 38 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றின் விவரம் இணைப்பு -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 19-ஆம் தேதி வரை, நாட்டில் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. * ஃபேம் -2 திட்டத்தின் கீழ், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ...
இந்திய வரலாற்றில் முதல் முறையாக…. ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட சிபிஎம் முடிவு! இதே கம்யூனிஸ்ட் தான் 1947இல், "இந்த சுதந்திரம் ...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோவிலில், முஸ்லிம்கள் ஆவேச தாக்குதல் நடத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதால் கோவில் கடுமையாக சேதமடைந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் ...