சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து பிரதமர் மோடி அறிவிப்பு.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார். தேர்வு தொடர்பாக இது வரை நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரிடம் ...
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார். தேர்வு தொடர்பாக இது வரை நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரிடம் ...
நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.86 கோடியை (20,86,12,834) கடந்துள்ளதாக இன்று மாலை 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கை தெரிவிக்கிறது. 18 முதல் 44 வயதுடைய 13,36,309 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை ...
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கணக்கில் வராத’ தடுப்பு மருந்து டோஸ்கள் குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தவறானவை மற்றும் இது குறித்த முழு தகவல்கள் இல்லாதவை ஆகும். பாரத் ...
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 14-வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது. இவற்றில் ரூ.5,516.60 கோடி ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ள 23 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.483.40 கோடி சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன (தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி). மீதமுள்ள 5 மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. https://www.youtube.com/watch?v=6Kmg8vHDiAU தற்போது, 76 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.76,616.16 கோடி மாநிலங்களுக்கும், ரூ.7,383.84 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. 2020 அக்டோபர் 23-ஆம் தேதி முதல் இதுவரை 14 கட்டங்களாக கடன்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகம், பிப்ரவரி 1-ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடியை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.5229.92 கோடி திரட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரூ.565.54 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு சங்கத்தின் 92-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை பாராட்டினார். வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு பலன் அளிப்பதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் பேசினார். மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இதில் பங்கேற்றனர். -----
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில், துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் 836 கிராம் தங்கப் பசையை, 3 பொட்டலங்களாக ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தார். அதிலிருந்து 722 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.36.52 லட்சம். இதையடுத்து மணிகண்டன் சங்கர் கைது செய்யப்பட்டதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
சாத்தியமுள்ள விமான நிறுவனங்களின் மூலம் சிறப்பு நோக்க முகமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, தில்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன. கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு கடல் விமான சேவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2020 அக்டோபர் 31 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கிய துறைமுகங்களுக்கான தூர்வாருதல் வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. பங்குதாரர்களுடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. http://shipmin.gov.in/sites/default/files/Draft%2520guidelines%2520for%2520comments_compressed.pdf என்னும் முகவரியில் வரைவு வழிகாட்டுதல்களை காணலாம். கருத்துகளை 2021 ஜனவரி 31 வரை anil.pruthi@nic.in என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
ஆடுமேய்ப்பவரின் மகனான தேனி சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 2020 #NEET தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில், அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் ...
திரைப்பட உலகில் நடிகர்கள் சிலர் தங்கள் நிஜ வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சில நிஜ செயல்களால் நிஜ ஹீரோக்களாகிறார்கள். நாம் வாழும் உலகின் மீதும் நாட்டின் மீதும் ...
கொரோனா வைரஸ் தொற்று நாட்டை உலுக்கிய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கேர்ஸ் நிதியை அமைத்து மக்களை நிதியத்திற்கு பங்களிக்க அழைத்திருந்தார். தற்போதைய கோவிட் -19 ...