Tag: MODI

ஜெகன்மோகன் ரெட்டியின் முகத்திரையை கிழித்தெரிந்த பாஜக தேசிய செயலாளர்.

பாஜக தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கண்டனம். ஜகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசு திருமலா-திருப்பதி தேவஸ்தானத்தின் பக்தர்கள் அளிக்கும் பணம், சொத்துக்களைத் தன் உபயோகத்துக்குக் ...

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்: வெற்றிகரமான 5 வருடங்கள் .

ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது 2016 ஜனவரி 13 அன்று, இந்திய விவசாயிகளின் பயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை கையாளும் முறையை வலுப்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவொன்றை எடுத்த மத்திய அரசு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறைவான, ஒரே மாதிரியான கட்டணத்தில் விரிவான காப்பீட்டுத் தீர்வை அளிக்கும் மைல்கல் நடவடிக்கையாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=rLduNz3H-HE விவசாயிகளின் பங்குத் தொகைக்கு அதிகமான காப்பீட்டு கட்டணம் மாநில அரசாலும், மத்திய அரசாலும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 90 சதவீத கட்டண மானியத்தை ஏற்கிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு முன் இருந்த சராசரி காப்பீட்டு தொகையான ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,100 என்பது, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.40,700 ஆக உயர்த்தப்பட்டது. 2019 கரீப் பருவத்தில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வறண்ட சூழல் நிலவிய போது ரூ 500 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் உள்ளிட்டவை இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க உதாரணங்கள் ஆகும். ஒரு வருடத்தில் 5.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது வரை, இந்தத் திட்டத்தின் கிழ் ரூ 90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பின் மூலம் காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே விரைவாகச் செலுத்தப்படுகிறது. கொவிட் பொதுமுடக்க காலத்தில் கூட ரூ 8,741.30 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில், சுமார் 70 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதல்: 532.79 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு.

காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மத்திய ...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்?

அரசியல் தூது என்பது ஒரு கலை, வெளியுறவு அரசியல் என்பதை நிர்ணயிப்பதே அதுதான் . தூது என்றால் அண்டை நாட்டுக்கு சென்று விருந்து உண்டுவிட்டு படம் எடுத்து ...

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

சாத்தியமுள்ள விமான நிறுவனங்களின் மூலம் சிறப்பு நோக்க முகமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, தில்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன. கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு கடல் விமான சேவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2020 அக்டோபர் 31 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கிய துறைமுகங்களுக்கான தூர்வாருதல் வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. பங்குதாரர்களுடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. http://shipmin.gov.in/sites/default/files/Draft%2520guidelines%2520for%2520comments_compressed.pdf என்னும் முகவரியில் வரைவு வழிகாட்டுதல்களை காணலாம். கருத்துகளை 2021 ஜனவரி 31 வரை anil.pruthi@nic.in என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

பிரசாந்த் கிஷோருக்கு இப்பொழுது நே ரம் சரியில்லை என்றே நான் நினைக்கி றேன்.அதனால் தான் மேற்கு வங்காள த்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேறும் எம்எல்ஏக்கள் அவரையே ...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.  மலிவான, நிலையான வீட்டு வசதித் திட்டத்தின் ஊக்குவிப்பாளர் (ஆஷா-இந்தியா) திட்டத்தின் கீழ் வெற்றி பெற்றவர்களை அவர் அறிவித்தார் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அவர் ஆண்டு விருதுகளை வழங்கினார்.  இந்திய வீடுகளுக்கான  புதிய, மலிவான, சரிபார்க்கப்பட்ட, ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் படிப்பையும் (நவரித்) அவர் வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர்கள் இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  புதிய தீர்வுகளை நிருபிக்க, புதிய சக்தியுடன் முன்னேறும் நாள் இது எனவும், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு வீடுகள் கட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பெறும் நாள் எனவும் கூறினார்.   தொழில்நுட்ப மொழியில், இந்த வீடுகள், சிறிய நவீன வீடுகள் திட்டம் என அழைக்கப்படுகிறது.  ஆனால் இந்த ஆறு திட்டங்களும் உண்மையிலேயே கலங்கரை விளக்கம் போல், நாட்டில் வீட்டு வசதித் துறைக்குப் புதிய திசையைக் காட்டும். இந்த சிறிய வீடுகள் திட்டம், தற்போதைய அரசின் அணுகுமுறைக்கு உதாரணமாக உள்ளன என பிரதமர் கூறினார்.  ஒரு காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும், தரத்திலும், நுணுக்கத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.  இன்று, திட்டங்களை விரைவாக முடிக்க, நாடு வேறு அணுகுமுறையைத் தேர்வு செய்து, மாற்று வழியையும், சிறந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்றுகிறது. அரசின் அமைச்சகங்கள் மந்தமான பெரிய அமைப்புகளாக இல்லாமல், புதிய நிறுவனங்கள் போல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட புதுமையான கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.  இந்த உலகளாவிய போட்டி, புதுமை மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் வளரும் வாய்ப்பை அளித்துள்ளது என அவர் கூறினார். இன்றிலிருந்து ஆறு வெவ்வேறான இடங்களில் இருந்து ஆறு சிறிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்குகிறது என பிரதமர் கூறினார். இந்த சிறிய வீடுகள் திட்டம், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை முறையால் உருவாக்கப்படும் எனவும், இது கட்டுமான காலத்தைக் குறைக்கும் எனவும், ஏழைகளுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கும் எனவும் பிரதமர் கூறினார். இந்த வீடுகளின் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் புதுமை இருக்கும் என அவர் கூறினார்.  உதாரணத்துக்கு, இந்தூரில் கட்டப்படும் வீடுகள் திட்டத்தில், செங்கல் மூலம் சுவர்கள் உருவாக்கப்படாது. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் இணைப்புகளாக அவை இருக்கும்.  ராஜ்கோட்டில் கட்டப்படும் சிறிய வீடுகள், பிரெஞ்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. அவை குகைத் தொழில்நுட்ப முறையில் கான்கிரீட் மூலம் உருவாக்கப்படும். இது பேரிடர்களைத் தாங்க கூடியதாக இருக்கும்.  சென்னையில், அமெரிக்க மற்றும் பின்லாந்து தொழில்நுட்பத்தில், கான்கிரீட் மூலம் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட பாகங்களை இணைக்கும் முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப்படுகின்றன.   ராஞ்சியில் கட்டப்படும் வீடுகளில் ஜெர்மன் நாட்டின் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு அறையும், தனியாக உருவாக்கப்பட்டு, பொம்மை இணைப்பு வடிவங்களைச் சேர்ப்பது போல  ஒன்றாகச் சேர்க்கப்படும். அகர்தலாவில் கட்டப்படும் வீடுகள், நியூசிலாந்து தொழில்நுட்பத்தில் எஃகுச் சட்டங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும். இது பெரிய நிலநடுக்க அபாயத்தை தாங்க கூடியது. லக்னோவில் கனடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பிளாஸ்டர் மற்றும் பெயின்ட் தேவை இல்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுவர்கள் மூலம் இந்த வீடுகள் விரைவாகக் கட்டப்படும்.  ஒவ்வொரு இடத்திலும் 12 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும்.  ஒவ்வொரு இடமும் நமது திட்டத் தயாரிப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு புதிய தொழில்நுட்பத்தையும், அனுபவத்தையும் கற்கும் மையமாக இருக்கும்.  இத்துடன், கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான திறனை மேம்படுத்த சான்றிதழ் படிப்பும் தொடங்கப்படும் எனவும்  அப்போது தான், வீடு கட்டுமானத் துறையில், உலகின் சிறந்த தொழில்நுட்பம் மற்றம் பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.  நம்நாட்டில் நவீன வீட்டுவசதித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஆஷா - இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார். இதன் மூலம், 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய மற்றும் மலிவான கட்டிடத் தொழில்நுட்பம் நாட்டில் உருவாக்கப்படும். இந்தப் பிரசாரத்தின் கீழ், ஐந்து சிறந்த தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார். நகரத்தில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப் பெரிய கனவு சொந்த வீட்டில் வசிப்பதுதான் என அவர் கூறினார்.  ஆனால், பல ஆண்டுகளாக, சொந்த வீட்டின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வந்தனர். நம்பிக்கை ஏற்பட்டாலும், அதிக விலை காரணமாக , வீடு வாங்குவது குறைந்தது. சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதாலும், மக்கள் நம்பிக்கை இழந்தனர். வங்கியின் அதிக வட்டி, வீட்டுக் கடன் கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவை  வீடு வாங்கும் ஆர்வத்தை மேலும் குறைத்தன. சாதாரண மனிதரும் சொந்த வீடு பெற முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகரங்களில், இலட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. புதுமை, உள்ளூர்த் தேவை, வீட்டு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை அமல்படுத்துவது ஆகியவற்றில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கவனம் செலுத்தியது என பிரதமர் கூறினார். ஒவ்வொரு வீடும் மின்சாரம், தண்ணீர், கேஸ் இணைப்பு பெற்ற வீடாக உள்ளது.  ஜியோ-டேக்கிங் மற்றும் பயனாளிகளுக்கு நேரடிப் பணப்பரி மாற்றத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. நடுத்தர மக்களின் பலன்கள் குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, வீட்டுக் கடன்களுக்கு அவர்கள் ...

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

விவசாயிகள் 7-வது தவணையின் பணம் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் புகார் செயலாம்!`

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, பிரதமர் மோடி தனது சொந்த கைகளால் 7 வது தவணைத் தொகையை விவசாயிகள் கணக்கிற்கு அனுப்பினார், உங்கள் கணக்கில் ரூ.2000 ...

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று பாஜக கட்சியில் இணைந்தார். கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர் ...

விவசாயிகளுக்கான 100வது கிசான் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கான 100வது கிசான் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

நூறாவது விவசாயிகள் ரயிலை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரையிலான இந்த ரயிலை காணொலி மூலம் பிரதமர் துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் திரு.பியூஷ் கோயல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். விவசாயிகள் ரயில் என்பது நாட்டிலுள்ள விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்கான முக்கியமான நடவடிக்கை என்று நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறினார். கொரோனா காலத்தில் கூட, கடந்த நான்கு மாதங்களில் 100 விவசாயிகள் ரயில்கள் தொடங்கப்பட்டதைக் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். வேளாண் தொடர்பான பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இந்தச் சேவை கொண்டு வரும் என்றும், நாட்டின் குளிர்ப்பதன விநியோகச் சங்கிலியின் வலிமையை இது அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். சிறிய அளவிலான வேளாண் பொருள்களும் முறையான வகையில், குறைந்த செலவில் பெரிய சந்தைகளை சென்றடையும் வகையில், கிசான் ரயில் வாயிலாக செய்யப்படும் சரக்குப் போக்குவரத்துக்கு குறைந்தபட்ச அளவு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். விவசாயிகள் ரயில் திட்டம் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்கான அரசின் உறுதியை மட்டும் காட்டவில்லை என்றும், நமது விவசாயிகள் புதிய வாய்ப்புகளுக்கு எத்தனை சீக்கிரமாகத் தயாராகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார். விவசாயிகள் தற்போது தங்களது பொருள்களை இதர மாநிலங்களிலும் விற்கலாம் என்றும், விவசாயிகள் ரயிலும், வேளாண் விமானங்களும் இதில் பெரும் பங்காற்றுகின்றன என்றும் அவர் கூறினார். பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் மீன் உள்ளிட்ட அழுகும் பொருள்களை முழு பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடமாடும் குளிர்பதன சேமிப்பு வசதி தான் விவசாயிகள் ரயில் என்று அவர் கூறினார். “சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே வலைப்பின்னல் இருந்தது. குளிர்பதனச் சேமிப்பு வசதியும் முன்பே இருந்தது. தற்போது விவசாயிகள் ரயில் மூலம் இந்த பலம் முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது,” என்று பிரதமர் மேலும் கூறினார். மேற்கு வங்கத்தில் இருக்கும் பல இலட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய வசதியை விவசாயிகள் ரயில் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். விவசாயிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு இந்த வசதி கிடைக்கும். வேளாண் நிபுணர்களும், இதர நாடுகளின் அனுபவமும், புதிய தொழில்நுட்பமும் இந்திய விவசாயத்துறையில் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக அவர் கூறினார். விவசாயிகள் தங்கள் பொருள்களைச் சேமித்து வைக்கும் வகையில் அழுகக்கூடிய ரயில் சரக்கு மையங்கள் ரயில் நிலையங்களுக்கு அருகில் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு எந்த அளவு முடியுமோ அந்த அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பொருள்கள் சாறு, ஊறுகாய், சாஸ், சிப்ஸ் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தொழில்முனைவோரை சென்றடைய வேண்டும் என்று பிரதமர் கூறினார். சேமிப்பு சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வேளாண் பொருள்களுக்கு மதிப்பைக் கூட்டும் பதப்படுத்துதல் தொழில்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் கிருஷி சம்பதா திட்டத்தின் கீழ் மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள், குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பு, வேளாண் பதப்படுத்துதல் குழுமம் ஆகியவற்றின் கீழ் இத்தகைய சுமார் 6500 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத் தொகுப்பின் கீழ் குறு உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு ரூ 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தான் அரசின் முயற்சிகளை வெற்றியடைய செய்வதாக திரு மோடி கூறினார். வேளாண் தொழில் மற்றும் வேளாண் உள்கட்டமைப்பில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்ற கூட்டுறவுக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சமீபத்திய சீர்திருத்தங்கள் வேளாண் தொழிலின் விரிவாக்கத்திற்கு வழி வகுத்து, இக்குழுக்களை மிகப்பெரிய பயனாளிகளாக ஆக்கும். இந்தக் குழுக்களுக்கு உதவுவதற்கான அரசின் முயற்சிக்கு வேளாண் துறையில் செய்யப்படும் தனியார் முதலீடு ஆதரவளிக்கும். “இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதற்கான பாதையில் முழு அர்ப்பணிப்புடன்  நாங்கள் முன்னேறி செல்வோம்,” என்று பிரதமர் கூறினார்.

Page 25 of 39 1 24 25 26 39

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x