மனதின் குரல் 2.0’, 10ஆவது பகுதியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் .
எனதருமை நாட்டுமக்களே, பொதுவாக மனதின் குரலில் நான் பல விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்து தருவேன். ஆனால் இன்றோ, நாட்டிலும் சரி, உலகில் உள்ளோர் மனங்களிலும் சரி, ...
எனதருமை நாட்டுமக்களே, பொதுவாக மனதின் குரலில் நான் பல விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்து தருவேன். ஆனால் இன்றோ, நாட்டிலும் சரி, உலகில் உள்ளோர் மனங்களிலும் சரி, ...
கொரோனா' வைரஸ் தொற்றால், உலகமே பீதியடைந்து வருகிறது, வல்லரசு நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றார்கள். இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு ...
அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இதுஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்சேவைத் துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள்ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு ...
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். 11 மொழிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகையாளர்கள் 14 இடங்களில் இருந்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். செய்திகளை நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பரப்பும் அளப்பரிய பங்களிப்பை ஊடகங்கள் செய்துவருவதாக பிரதமர் கூறினார். ஊடக கட்டமைப்பு இந்தியா முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவியுள்ளதாக அவர் கூறினார். இந்தக் கட்டமைப்பு, ஊடகங்கள் சரியான தகவலை சிறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று, சவாலுக்கு எதிரான போராட்டத்தை முக்கியத்துவம் வாயந்ததாக மாற்றியுள்ளது. செய்தித்தாள்கள் பெரும் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளன என்றும், ஒவ்வொரு பத்திரிகையின் உள்ளூர் பக்கம் ஏராளமானவர்களால் அதிகமாக வாசிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். எனவே, இந்தப் பக்கத்தில் வெளியாகும் கொரோனோ வைரஸ் பற்றிய கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு பரப்பப்படுவது அவசியமாகிறது. பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன, அங்கு யார் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், யாரை அணுக வேண்டும், வீட்டில் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற தகவல்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தகவல்கள் செய்தித்தாள்களிலும், அவற்றின் இணையதள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஊரடங்கு, தடை உத்தரவு போன்ற சமயங்களில் ,அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் பக்கங்களில் இடம்பெற வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பு பாலமாகச் செயல்பட்டு, தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் தொடர்ச்சியான தகவல்களைத் தரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி, மாநில அரசுகளின் ஊரடங்கு, அடைப்பு உத்தரவுகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வைரஸ் பரவுவதால் ஏற்படும் பாதிப்புக்களை சர்வதேச தரவுகள், பிறநாடுகளின் ஆராய்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொற்றுக்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டிய பிரதமர், வதந்திகள் , அவநம்பிக்கை, எதிர்மறை தகவல்கள் பரவுவதைச் சமாளிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். கொவிட் -19 தாக்கத்தை முறியடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். பிரதமர் தமது எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தி நாட்டை முன்னணியில் வழிநடத்திச் செல்வதாக, அச்சு ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ளவர்கள் பாராட்டினர். ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற பிரதமரின் யோசனைகளைச் செயல்படுத்த பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்தனர். அச்சு ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தத் தீவிரமான சவாலை ஒன்று சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறைகூவலை நாடு முழுவதும் பின்பற்றுவதாக அவர்கள் கூறினர். கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் அளித்த தகவல்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடைக்கோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக பொறுப்புணர்வை மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். நமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது கட்டாயம் என அவர் அறிவுறுத்தினார். அரசின் தீவிரக்கண்காணிப்பு, நடவடிக்கை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, பீதி பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்காக பத்திரிகையாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர் நன்றி தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில் தவறான தகவல்கள் பரவுவதை அச்சு ஊடகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக, கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களுடன் உறையற்றினார் பிரதமர் நரேந்திர மோடி அப்போதுநாட்டு மக்கள் அனைவரும் ஒரு நாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு ...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை முன்னெடுத்து வருகிறது. முக்கியமாக நாடு முழுவதும் ...
உலகளவில் இப்பொழுது இத்தாலியில் தான் மிக அதிக அளவில் கொரானாவினால்மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்கவும் இத்தாலிக்கு உதவவும் பல முயற்சியில் இறங்கியுள்ளது ...
பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் தனியார் வணிகவளாகங்கள் , சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் ...
அடுத்த சில நாட்கள் / வாரங்களுக்கு அத்தியாவசியமான காரணம் தவிர்த்து பிற காரணங்களுக்காக தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்துகள்/ உபாயங்கள் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நிகழ்த்திய உரை உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா.தற்போது கொரோனாவை ...