Tag: NEWS

பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!

பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது: எல் முருகன்.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது என  மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறினார்.சென்னையில் நடந்த வர்த்தகம்  மற்றும் வணிக  வார நிறைவு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கின் கீழ், இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஏற்றுமதி துறையில் இடைவிடாத சீர்திருத்தங்கள், நல்ல பயன்களை அளித்துள்ளன. சீர்திருத்தங்கள், எளிதாக தொழில் செய்வது ஆகியவற்றின் மீது பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை வைத்துள்ளார். ஏற்றுமதி வளர்ச்சி துறை மற்றும் ஏற்றுமதி தொடர்பான சீர்திருத்தங்களிலும், நாம் இவற்றை காணலாம். சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை, ஏற்றுமதி சார்ந்த திட்டங்கள் மூலம் ஏற்றுமதியை வர்த்தகத்துறை ஊக்குவிக்கிறது. ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் இந்த இரு கொள்கைகளும் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றன. தமிழ்நாட்டில் 49 சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,500 நிறுவனங்களுடன் செயல்பாட்டில் உள்ளன. இவை தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தமிழகத்தில் தேவையான வேலை வாய்ப்பு, சாதகமான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்திய ஏற்றுமதி சேவை திட்டம் (SEIS), மத்திய மாநில வரி தள்ளுபடி திட்டங்கள் (RoSCTL), போக்குவரத்து மற்றும் சந்தை உதவி (TMA) மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் மூலதன பொருட்கள் திட்டம் போன்றவை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றன. https://www.youtube.com/watch?v=436YGpfOfzM&t=6s ஏற்றுமதியில், தமிழ்நாடு 3வது பெரிய மாநிலமாக தற்போது உள்ளது. மாநிலத்தின் ஏற்றுமதி ஆற்றல் மிகப் பெரியவை. சென்னையிலிருந்து வாகனங்கள், நாமக்கல்லில் இருந்து கோழி வளர்ப்புத் தொழில், திருப்பூர்,கோயம்புத்தூரில் இருந்து ஜவுளித் தொழில், வேலூரிலிருந்து தோல் தயாரிப்புகள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலவிதமான பொருட்கள் தமிழ்நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களில், ஏற்றுமதி வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது உள்ளூர் அளவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும்.  இது மாவட்டங்களுக்கு மட்டும் அல்லாமல், ஊரக பகுதிகளிலும் பொருளாதார உந்துதலை கொண்டுவரும். ஒவ்வொரு மாவட்டத்தையும், ஏற்றுமதி மையமாக மாற்ற வேண்டும்.  இந்த தொலைநோக்குடன், மத்திய அரசின்,  மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக்கும் முயற்சி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.17 முதல் 18 சதவீத வேளாண் ஏற்றுமதி இந்தியாவில் இருந்துதான் நடக்கிறது.  கடல்சார் துறையை உக்குவிக்க, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தை, ரூ.20,050 கோடி முதலீட்டில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம், மீன்கள் ஏற்றுமதியை ரூ.46,662 கோடியிலிருந்து, 2024-25ம்  ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.  இத்திட்டத்தை தமிழக இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடற்பாசி விவசாயத்தில் உள்ள திறனை அங்கீகரிப்பது, கடலோர பகுதி மக்கள், சுயஉதவி குழுவினர், பெண்கள் வாழ்வில் மாற்றத்தை  இத்திட்டம் கொண்டு வருகிறது. இந்தியாவில் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்பட்டது.  முன்னணி ஏற்றுமதி மையமாக மாறத் தேவையான அனைத்து அம்சங்களும், தமிழ்நாட்டில் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்துறையினர் தங்களின் தரமான தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.  ஏற்றுமதி செய்யப்படும் பொருள், பிராண்டு பெயரை மட்டும் அல்லாது, தமிழகம் மற்றும் இந்தியாவின் புகழையும் கொண்டு செல்கிறது. அதனால் தரத்தில் சமரசம் கூடாது.  சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்தான் புதிய மந்திரம். தற்சார்பு இந்தியாதான் தொலைநோக்கு. உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதுதான், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல் திட்டம். சுதேசி இயக்கத்தை வழிநடத்திய வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழியை பின்பற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடி தற்சார்பு இந்தியா மற்றும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை, சுதந்திர இந்தியாவின் வைர விழாவில் அறிவித்தார். ஏற்றுமதிக்கு, புதிய துறைகள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. உள்ளூர் தயாரிப்பு பொருட்கள், ஜவுளிகள், பொம்மைகள் ஆகியவை உலக சந்தையில் இடம்பெற ஊக்குவிக்கப்படுகின்றன. ஒரு வார கால கொண்டாட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்ததில் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.  சுதந்திர இந்தியாவின் வைர விழாவை கொண்டாடுவதற்காக, வர்த்தக மற்றும் வணிக வாரம் நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை கொண்டாப்பட்டது. இவ்வாறு மத்திய இணையமைச்சர் டாக்டர். எல் முருகன் பேசினார்.  சென்னை தாம்பரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மெப்ஸ்ல் நடந்த இந்த விழாவில் வெளிநாட்டு வர்த்தகத்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் எம்.கே. சண்முக சுந்தரம், இணை இயக்குனர் திருமதி எப்.டி.இனிதா மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கலைஞர் டிவி மீது போலீஸில் புகார் தரமான சம்பவம் செய்த பாஜக.

கலைஞர் டிவி மீது போலீஸில் புகார் தரமான சம்பவம் செய்த பாஜக.

கலைஞர் (பொய்) செய்திகள் மீது போலீஸில் புகார் குஜராத் முந்த்ரா port ரூ 21000 கோடி ஹெராயின் பறிமுதல்-மோடியின் தயவுடன் கடத்தலாம் ! இவர்களை என்ன செய்யலாம்? ...

பிரதமர் மோடி உள்ளிட்ட குவாட் தலைவர்களிடமிருந்து கூட்டு அறிக்கை.

பிரதமர் மோடி உள்ளிட்ட குவாட் தலைவர்களிடமிருந்து கூட்டு அறிக்கை.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகியநாங்கள் முதன்முறையாக இன்று "குவாட்" மாநாட்டிற்காக நேரில் கூடினோம். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்களது கூட்டாண்மை, பாதுகாப்பு, மற்றும் செழிப்புக்கு அடித்தளமாக இருக்கும் ஒரு பிராந்தியத்திற்கு – சுதந்திரமான வெளிப்படையான இந்தோ –பசிபிக்கை உள்ளடக்கியது என்பதை மீண்டும் ஒப்புக்கொள்கிறோம். எங்கள் கடைசி சந்திப்பு நடந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. மார்ச் முதல், COVID19 தொற்றுநோய் தொடர்ந்து உலகளாவிய துன்பத்தை ஏற்படுத்தியது; காலநிலை நெருக்கடியை முடுக்கிவிட்டது; ...

தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

தலிபான் பயங்கரவாதத்தை முறியடிக்க ஜோபைடன்-மோடி மாஸ்டர் பிளான்.

உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்காகவும், தங்களது நெருங்கிய உறவுகளை  புதுப்பிப்பதற்காகவும், அதிபர் ஜோசப் ஆர்.பைடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை,  தங்களது முதலாவது நேர்முக சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெள்ளை  மாளிகைக்கு வரவேற்றார்.  அமெரிக்க,இந்திய உறவுகளை முன்னெடுத்துச் செல்வது, பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குவது, ஆசியான், குவாட் போன்ற பிராந்திய குழுக்களாக  இணைந்து செயலாற்றுவது, இந்தோ.பசிபிக் பிராந்தியத்தில் நலன்களை மேம்படுத்துவது, அதற்கும் மேலாக,  இருநாடுகளின் உழைக்கும் குடும்பங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு  கூட்டாண்மையை மேம்படுத்துவது, கோவிட்-19 தொற்று மற்றும் இதர சுகாதார சவால்களுக்கு  எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவது, பருவநிலை நடவடிக்கையை அதிகரிக்கும் உலக முயற்சிகளை அதிகரிப்பது, ஜனநாயக மாண்புகளை  வலுப்படுத்துவது, நமது மக்களுக்கு ஆதரவளிப்பது, இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது   போன்றவற்றில்  வழிகாட்டுவதற்கான தெளிவான தொலைநோக்குடன் தலைவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். அதிபர் பைடன், பிரதமர் மோடி ஆகியோர் கடந்த ஓராண்டாக கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அரசுகள், சிவில் சமுதாயம்,  தொழில்துறையினர், அவசர கால நிவாரணப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதில் ஈடுபட்ட வம்சாவளியினர் என  தங்களது நாடுகள் அளித்து  வரும்  நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து ஆழமான பெருமிதத்தையும், பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொண்டனர். தொற்றுக்கு முடிவு கட்டும் வகையில்,  உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், தங்களது சொந்த குடிமக்களைப் பாதுகாப்பதற்காக கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவது பற்றிய  தங்களது அர்ப்பணிப்பை அவர்கள் வெளியிட்டனர். கோவாக்ஸ் உள்ளிட்ட திறன் வாய்ந்த கோவிட்-19 தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்வது என்ற  இந்தியாவின்  அறிவிப்பை அதிபர் பைடன் வரவேற்றார். தொற்றுகளை எதிர்நோக்கி முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, வருங்காலத்தில் தொற்று அபாயங்களை குறைப்பது உள்ளிட்ட உலக சுகாதார நலனுக்கான முக்கிய விஷயங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு  இறுதி வடிவம் கொடுப்பதை இரு தலைவர்களும் பாராட்டினர். பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அடுத்த கட்டத்துக்கு தயாராவது, பெருந்தொற்றுக்கு எதிராக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்  வகையிலும், உலக கோவிட்-19 உச்சிமாநாட்டை அழைப்பதற்கான முன்முயற்சிக்காக அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.  பாரிஸ் உடன்படிக்கைக்கு திரும்புதல் உள்ளிட்ட பருவநிலை நடவடிக்கை குறித்த அமெரிக்க தலைமையின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி வரவேற்றார்.  ...

தமிழகத்தில் தொடர்கொலைகள் இதுதான் விடியல் ஆட்சியா-ஒபிஎஸ் ஆவேசம்.

தமிழகத்தில் தொடர்கொலைகள் இதுதான் விடியல் ஆட்சியா-ஒபிஎஸ் ஆவேசம்.

தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்சஉணர்வு பொதுமக்களிடையே இருந்து வருகின்ற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ...

கொதித்தெழுந்த இந்தியர்கள் பல்டி அடித்தது இங்கிலாந்து அரசு.

கொதித்தெழுந்த இந்தியர்கள் பல்டி அடித்தது இங்கிலாந்து அரசு.

அக்டோபர் 4 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான கொரோனா விதிமுறைகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டு இருந்தது. "இந்திய தடுப்பு மருந்துகளை செலுத்திக் ...

உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மரை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.  இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் ...

இதுதான் உங்க கருத்துசுதந்திரமா லவ்ஜிகாத் குறித்து படத்தின் ட்ரைலர் வந்தவுடன் நிதிமனறத்தில் படத்திற்கு தடைவிதிக்க மனு !

இதுதான் உங்க கருத்துசுதந்திரமா லவ்ஜிகாத் குறித்து படத்தின் ட்ரைலர் வந்தவுடன் நிதிமனறத்தில் படத்திற்கு தடைவிதிக்க மனு !

எப்படி இஸ்லாமியர் மற்ற மதத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்து ஏமாற்றி லவ் ஜிஹாத் வலையில் வீழ்த்துகிறார்கள் என்பது பற்றிய ஹிந்தி படம் (The Conversion) அக்டோபர் 8இல் ...

முதல்வர் பிடிஆருக்கு பலமுறை அறிவுரை கூறியும் திருந்தவில்லை உண்மைமையை போட்டுடைத்த திமுக மூத்தநிர்வாகி.

முதல்வர் பிடிஆருக்கு பலமுறை அறிவுரை கூறியும் திருந்தவில்லை உண்மைமையை போட்டுடைத்த திமுக மூத்தநிர்வாகி.

கடந்த செப்டம்பர்‌ 17ஆம்‌ தேதி, மத்திய நிதி அமைச்சர்‌ திருமதி நிர்மலா சீதாராமன்‌ தலைமையில்‌ லக்னோவில்‌ நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கூட்டத்தில்‌ தமிழகத்தின்‌ சார்பில்‌ பேசப்பட வேண்டிய ...

வளைகாப்பு அமைச்சருக்கு மனநிலை சரியில்லையா சம்பவம் செய்த அண்ணாமலை !

வளைகாப்பு அமைச்சருக்கு மனநிலை சரியில்லையா சம்பவம் செய்த அண்ணாமலை !

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த GST கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் ...

Page 134 of 165 1 133 134 135 165

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x