இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) ஒப்புதல் அளித்துள்ளதை, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில், ஒரு தீர்க்கமான திருப்புமுனை என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தொடர் டிவிட்டுகளில், பிரதமர் கூறியதாவது: ‘‘தீவிர போராட்டத்தை வலுப்படுத்த, ஒரு தீர்க்கமான திருப்புமுனை! நாட்டில் கோவிட் இல்லாத ஆரோக்கியமான சூழலை விரைவுபடுத்த, @SerumInstIndia மற்றும்@BharatBiotech ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகள் மற்றும் புத்தாக்க படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.’’ ‘‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கோவிட் தடுப்பூசிகளை அவசரக்கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும். இது, தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றும், நமது விஞ்ஞானிகளின் ஆர்வத்தை காட்டுகிறது. இதில் அக்கறை மற்றும் கருணை உள்ளது.’’ ‘‘நெருக்கடியான நேரத்திலும், சிறப்பான பணியை செய்ததற்காக, மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்கள் அனைவருக்கும், நமது நன்றியை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாம் அவர்களுக்கு எப்போதும், நன்றியுள்ளவர்களாக இருப்போம்.’’