542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த இதர பிரிவினர் சிறப்பு ரயில்களில் பயணிப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, "ஷ்ராமிக் சிறப்பு" ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. 12 மே, 2020 வரை, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 524 "ஷ்ராமிக் சிறப்பு" ரயில்கள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றில் 448 ரயில்கள் சேருமிடங்களை அடைந்துவிட்டன, 94 ரயில்கள் பயண வழியில் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசம் (1 ரயில்), பீகார் (117 ரயில்கள்), சத்தீஸ்கர் (1 ரயில்), ஹிமாச்சல் பிரதேசம் (1 ரயில்), ஜார்கண்ட் (27 ரயில்கள்), கர்நாடகா (1 ரயில்), மத்தியப்பிரதேசம் (38 ரயில்கள்), மகாராஷ்டிரா (3 ரயில்கள்), ஒடிஷா (29 ரயில்கள்), ராஜஸ்தான் (4 ரயில்கள்), தமிழ்நாடு (1 ரயில்), தெலங்கானா (2 ரயில்கள்), உத்திரப்பிரதேசம் (221 ரயில்கள்) மற்றும் மேற்கு வங்கம் (2 ரயில்கள்) என பல்வேறு மாநிலங்களை 448 ரயில்கள் சென்றடைந்தன. திருச்சிராப்பள்ளி, டிட்லகர், பரவுனி, கண்ட்வா, ஜகன்நாத்பூர், குர்தா ரோடு, பிரக்யாராஜ், சப்பரா, பாலியா, கயா, புர்ணியா, வாரணாசி, தர்பங்கா, கோரக்பூர், லக்னோ, ஜாவ்ன்பூர், ஹாட்டியா, பஸ்டி, காடிஹார், தனப்பூர், முசாபர்பூர், சஹஸ்ரா ஆகிய இடங்களுக்கு இடம் பெயர்ந்தோரை இந்த ரயில்கள் ஏற்றி சென்றன. இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஏறுவதற்கு முன்பாக, முறையான பரிசோதனைக்கு பயணிகள் உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. பயணத்தின் போது இலவச உணவும், தண்ணீரும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. ****