Tag: TAMIL NEWS OreDesam NEWS

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும்  பிரதமர் மோடி.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் உள்ள முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.  இது சவால்களை சந்திக்கும் நேரம் மட்டும் அல்ல குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க வேண்டிய காலம் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அரசு மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை பராமரிக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களாக உற்பத்தியை அதிகரித்ததற்காக ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பிரதமர் பாராட்டினார். திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அவர்  ஆமோதித்தார். நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள, தொழிற்சாலை ஆக்ஸிஜனை மாற்றிவிட்டதற்காக ஆக்ஸிஜன் தொழில்துறையினருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலைமையை மேம்படுத்த, வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர்  பேசினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் அதேபோல் ஆக்ஸிஜன் போக்குவரத்துக்கான வசதியையும் மேம்படுத்த வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.  ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு, இதர  கேஸ் டேங்கர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்  ஆக்ஸிஜன் தொழில்துறையினரை வலியுறுத்தினார். மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு, காலி ஆக்ஸிஜன் டேங்கர்களை உற்பத்தி மையங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவது பற்றி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறினார். மத்திய அரசு, மாநிலங்கள், ஆக்ஸிஜன் தொழில் துறையினர், போக்குவரத்து உரிமையாளர்கள், மருத்துவமனைகள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என  பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சிறந்த கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தான், இந்த சவாலை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விரைவில் இந்த நெருக்கடியை நாடு வெற்றிகரமாக முறியடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைமை நிர்வாக இயக்குனர் திரு முகேஷ் அம்பானி, செயில் தலைவர் திருமதி சோமா மண்டல்,  ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் திரு சாஜன் ஜிந்தால், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் திரு நரேந்திரன், ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் திரு நவீன் ஜிந்தால், ஏஎம்என்எஸ் நிறுவனத்தின் திரு திலீப் ஓமன், லிண்டே நிறுவனத்தின் திரு எம் பானர்ஜி, ஐனாக்ஸ் நிறுவனத்தின் திரு சித்தார்த் ஜெயின், ஜாம்ஷெட்பூர் ஏர் வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு நொரியோ சிபுயா  நேஷனல் ஆக்ஸிஜன் லிமிடெட் நிறுவனத்தின் திரு ராஜேஷ் குமார் சரப்,  அகில இந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் திரு சாகெட் திகு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ரூ.25 கோடியை மோசடி! சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர் உட்பட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது!

சி.எஸ்.ஐ ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு ...

தமிழகத்தில் யாருக்காக வேலை செய்தால் பிரசாந்த் கிஷோர்

தமிழகத்தில் யாருக்காக வேலை செய்தார் பிரசாந்த் கிஷோர் என்ற கேள்வி திமுக பிரமுகர்கள் இடையே மீண்டும் எழுந்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக விற்காக அரசியல் வல்லுநர் ...

சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

தமிழகத்தில் 234 தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அனைத்து தொகுதிகளுக்கும் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி வாக்கு என்னப்படுகின்றது ...

ஸ்டாலினை தொடர்ந்து கொரானா குறித்து போலி செய்தியை பரப்பிய விசிக பாராளுமன்ற உறுப்பினர் !

என்ன செய்வார் திருமா ? ஒரு ஆணுக்கு ’பாலியல்’ தொல்லை கொடுத்தாரா, வி.சி.க செய்தித் தொடர்பாளர்..?

குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்யும் சேட்டைகள், தவறுகளை, கண்டிக்காமல். பா.ஜ.க, மோடி, மத்திய அரசு, மீது தொடர்ந்து ...

அட்டராசிட்டி தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்த தி.மு.கவினர்.

அட்டராசிட்டி தேங்காய் நார் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்த தி.மு.கவினர்.

கடலூர் மாவட்டம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் தொகுதிக்கான வாக்குப் பெட்டிகளை துணை ராணுவம்,போலீஸ் பலத்த பாதுகாப்புடன் விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் ...

நரேந்திரமோடிக்கு நன்றி செலுத்திய தேவேந்திர குல வேளாளர்கள் !

நரேந்திரமோடிக்கு நன்றி செலுத்திய தேவேந்திர குல வேளாளர்கள் !

ஒவ்வொரு இனமும் தன்னுடைய பண்பா டு அடையாளம் பெருமைப்படுத்தப்படும்பொழுது அதற்கு காரணமானர்வர்களைவணங்கி போற்றி நிற்கும் என்பதற்கு அடையாளமாக தேவேந்திர குலவேளா ளர்கள் மோடியின் புகழ் பாடியும் பிஜேபியின் ...

கேரள கடல் வழியில் கடத்தல் போதை பொருளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றது ! காரணம் என்ன ?

கேரள கடல் வழியில் கடத்தல் போதை பொருளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றது ! காரணம் என்ன ?

சமீப காலமாக கேரள கடல் வழியில் குறிப்பாக லட்சத்தீவு கேரளா இடையேயான கடல்பரப்பில் கைபற்றபட்ட போதைபொருளின் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றதுநேற்று மட்டும் 3 ...

இராணுவ ஆள்சேர்ப்பு பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.

இராணுவ ஆள்சேர்ப்பு பொது நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.

ஏப்ரல் 25-ஆம் தேதியன்று, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த, திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு பேரணியில் வெற்றி பெற்றவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு, கொவிட் பரவலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘இந்திய ராணுவத்தில் சேருங்கள்' (http://www.joinindianarmy.nic.in) என்ற இணையதளத்தில் புதிய தேதி பற்றிய விவரங்கள் வெளியிடப்படும்.  தேதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் சென்னையிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புதிய அனுமதி அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.‌ கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டம் ஆகிய சென்னை (தலைமையகம்) ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் உள்ள தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ராணுவ வீரர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் உதவி செவிலியர், ராணுவ வீரர் உதவி செவிலியர் கால்நடை, ராணுவ வீரர் எழுத்தர், பண்டகக் காப்பாளர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் பொதுப்பணி, ராணுவ வீரர் வர்த்தகர் உள்ளட்ட பணிகளில் சேர்வதற்கான இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி 2021 பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 26 வரை திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது கொவிட் பாதிப்பு அதிகரித்து வருவதால்  இந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ராணுவப் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் எல்லாம் மே 1-ம் தேதியில் இருந்து கொவிட்-19 தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம் .

2021 மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இதன் படி, கொவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர் ஆவர். பிரதமர் ...

Page 140 of 155 1 139 140 141 155

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x