Tag: TODAY TAMILNEWS

யார் எல்லாம் மே 1-ம் தேதியில் இருந்து கொவிட்-19 தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம் .

2021 மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இதன் படி, கொவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர் ஆவர். பிரதமர் ...

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

ஏப்ரல் 14-16 வரை தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மற்றும் மலைப் பிரதேசங்களிலும், மாஹே மற்றும் கர்நாடகாவின் கடலோர மற்றும் தெற்கு பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று ...

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

என் தாத்தா வீட்டில் நிறைய பலா மரம் இருந்ததால் பழத்தின் பக்குவம் அறிய ஓரளவு தெரியும் ! தெரிந்ததை சொல்கிறேன் வாங்கி அரிந்து அறிந்ததை அறிந்து கொள்ளலாம். ...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

ரயில்வே போக்குவரத்துக்கு குறித்து இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு.

தேவைக்கேற்ப , ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது சராசரியாக  நாள் ஒன்றுக்கு,  1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்குகிறது.  மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  ...

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அன்னிய குறுக்கீடு தேவையற்றது: குடியரசு துணைத் தலைவர்

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இருக்கும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறினார். ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த ...

திருக்கோவிலூரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக கடந்த சில நாட்களுக்கு ...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பிரதமரே பாராட்டி சென்றது எங்களுக்கு எனர்ஜி தருகிறது-அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

பாரத பிரதமரே பாராட்டி விட்டு சென்றது எங்களுக்கு எனர்ஜியாக இருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மதுரையில் ...

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்றை சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. 24 போலி நிறுவனங்களின் வாயிலாக போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனை வழங்கியதன் மூலம் ரூ. 53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது தொழில்நுட்ப உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் முறையாக, ஒட்டுமொத்த கும்பலையும் (அதன் மூளையாக செயல்பட்டவர் உட்பட),  அமலாக்கம் மற்றும் இணக்க மேலாண்மை பிரிவு கைது செய்துள்ளது. தீவிர விசாரணை, பல்வேறு இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சாத்தியமுள்ள அனைத்து ஆதாரங்களையும் சேகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதால், மோசடியின் மதிப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 பிப்ரவரி 12 அன்று கைது செய்யப்பட்ட இந்த கும்பலின் உறுப்பினர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான மாண்புமிகு நீதிபதி II முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்பு இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதர நபர்களின் கேஒய்சி ஆவணங்களை பயன்படுத்தி இந்த மோசடி செய்ததும், போலி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்டவற்றை வரி ஆலோசகர் செய்து தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றின் மூலம் பலனடைந்த நிறுவனங்கள் குறித்தும், வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ வரி செலுத்துவோர் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 26142850 மற்றும் 26142852. மின்னஞ்சல்: Sevakendra-outer-tn@gov.in கூடுதல் ஆணையர் திருமதி. பி ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகரம் அருகிலுள்ள புதுமனை கிராமத்தில் முஸ்லீம் - இந்து மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு பிரச்சனை. இந்து மாணவர்கள் மீது தாக்குதல் கடைக்கு சென்ற ...

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம் அளிக்கிறது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள்  வரை இந்திய விமானப்படை இயக்குகிறது.  இவற்றின் உதிரி பாகங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்திருந்தது.  தற்சார்பு நிலையை அடைவதற்கு இவற்றின் உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் இந்தியாவில் இருப்பதில் இந்திய விமானப்படை அதிக கவனம் செலுத்துகிறது. போர் விமானங்களின் பராமரிப்புக்குத் தேவையான திருகு ஆணிகள், வயர்கள், கேஸ்கட், ஸ்பிரிங் போன்ற சாதாரண உதிரி பாகங்கள் முதல், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த விமான உதிரி பாகங்களையும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை விமானப்படை விரும்புகிறது. நாட்டின் பல பகுதிகள் உள்ள போர் விமான பழுது பார்க்கும் மையங்களும் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாசிக்கில் மத்திய உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. இந்த தேவைகளுக்காக, மத்திய அரசின் பொது கொள்முதல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஒப்பந்த கோரிக்கை விவரங்கள் விமானப்படை இணையளம் indianairforce.nic.in -ல் உள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள,  200-க்கும் மேற்பட்ட  தொழில்நுட்ப உதிரிபாகங்கள் பட்டியல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையளம் srijandefence.gov.in -ல் உள்ளது.

Page 10 of 16 1 9 10 11 16

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x