Tag: TODAY TAMILNEWS

விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்  ரூ.1.59 கோடி அபராதம் விதித்தன. கட்டிடங்கள் கட்டுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் போன்றவற்றால் ஏற்படும் ...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தடுப்பூசிகளுக்கு அனுமதிஅளிக்கப் பட்டதற்காக, நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.

இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) ஒப்புதல் அளித்துள்ளதை, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில்,  ஒரு தீர்க்கமான திருப்புமுனை என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தொடர் டிவிட்டுகளில், பிரதமர் கூறியதாவது: ‘‘தீவிர போராட்டத்தை வலுப்படுத்த,  ஒரு தீர்க்கமான திருப்புமுனை! நாட்டில் கோவிட் இல்லாத ஆரோக்கியமான சூழலை விரைவுபடுத்த, @SerumInstIndia மற்றும்@BharatBiotech ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகள் மற்றும் புத்தாக்க படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.’’ ‘‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கோவிட் தடுப்பூசிகளை அவசரக்கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும். இது, தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றும், நமது விஞ்ஞானிகளின் ஆர்வத்தை காட்டுகிறது. இதில் அக்கறை மற்றும் கருணை உள்ளது.’’ ‘‘நெருக்கடியான  நேரத்திலும், சிறப்பான பணியை செய்ததற்காக, மருத்துவர்கள்,  மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள்,  துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கொரோனா  முன்கள பணியாளர்கள் அனைவருக்கும், நமது நன்றியை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாம் அவர்களுக்கு எப்போதும், நன்றியுள்ளவர்களாக இருப்போம்.’’

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமைழைக்கு வாய்ப்பு.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாகிஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் புயல்  மேலடுக்கு  சுழற்சி காணப்படுகிறது. இதோடு வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில், வடக்கு பஞ்சாப்பில் இருந்து வடகிழக்கு அரபிக் கடல் வரை காற்று சங்கமும் இன்று காணப்பட்டது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் ஜனவரி 5ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் தீவிர மழை பெய்யும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் 3 மற்றும் 4ம் தேதிகளிலும், ஜம்மு காஷ்மீர், லடாக், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஜனவரி 5, 6ம் தேதிகளில், இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.  மலிவான, நிலையான வீட்டு வசதித் திட்டத்தின் ஊக்குவிப்பாளர் (ஆஷா-இந்தியா) திட்டத்தின் கீழ் வெற்றி பெற்றவர்களை அவர் அறிவித்தார் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அவர் ஆண்டு விருதுகளை வழங்கினார்.  இந்திய வீடுகளுக்கான  புதிய, மலிவான, சரிபார்க்கப்பட்ட, ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் படிப்பையும் (நவரித்) அவர் வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர்கள் இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  புதிய தீர்வுகளை நிருபிக்க, புதிய சக்தியுடன் முன்னேறும் நாள் இது எனவும், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு வீடுகள் கட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பெறும் நாள் எனவும் கூறினார்.   தொழில்நுட்ப மொழியில், இந்த வீடுகள், சிறிய நவீன வீடுகள் திட்டம் என அழைக்கப்படுகிறது.  ஆனால் இந்த ஆறு திட்டங்களும் உண்மையிலேயே கலங்கரை விளக்கம் போல், நாட்டில் வீட்டு வசதித் துறைக்குப் புதிய திசையைக் காட்டும். இந்த சிறிய வீடுகள் திட்டம், தற்போதைய அரசின் அணுகுமுறைக்கு உதாரணமாக உள்ளன என பிரதமர் கூறினார்.  ஒரு காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும், தரத்திலும், நுணுக்கத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.  இன்று, திட்டங்களை விரைவாக முடிக்க, நாடு வேறு அணுகுமுறையைத் தேர்வு செய்து, மாற்று வழியையும், சிறந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்றுகிறது. அரசின் அமைச்சகங்கள் மந்தமான பெரிய அமைப்புகளாக இல்லாமல், புதிய நிறுவனங்கள் போல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட புதுமையான கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.  இந்த உலகளாவிய போட்டி, புதுமை மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் வளரும் வாய்ப்பை அளித்துள்ளது என அவர் கூறினார். இன்றிலிருந்து ஆறு வெவ்வேறான இடங்களில் இருந்து ஆறு சிறிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்குகிறது என பிரதமர் கூறினார். இந்த சிறிய வீடுகள் திட்டம், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை முறையால் உருவாக்கப்படும் எனவும், இது கட்டுமான காலத்தைக் குறைக்கும் எனவும், ஏழைகளுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கும் எனவும் பிரதமர் கூறினார். இந்த வீடுகளின் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் புதுமை இருக்கும் என அவர் கூறினார்.  உதாரணத்துக்கு, இந்தூரில் கட்டப்படும் வீடுகள் திட்டத்தில், செங்கல் மூலம் சுவர்கள் உருவாக்கப்படாது. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் இணைப்புகளாக அவை இருக்கும்.  ராஜ்கோட்டில் கட்டப்படும் சிறிய வீடுகள், பிரெஞ்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. அவை குகைத் தொழில்நுட்ப முறையில் கான்கிரீட் மூலம் உருவாக்கப்படும். இது பேரிடர்களைத் தாங்க கூடியதாக இருக்கும்.  சென்னையில், அமெரிக்க மற்றும் பின்லாந்து தொழில்நுட்பத்தில், கான்கிரீட் மூலம் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட பாகங்களை இணைக்கும் முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப்படுகின்றன.   ராஞ்சியில் கட்டப்படும் வீடுகளில் ஜெர்மன் நாட்டின் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு அறையும், தனியாக உருவாக்கப்பட்டு, பொம்மை இணைப்பு வடிவங்களைச் சேர்ப்பது போல  ஒன்றாகச் சேர்க்கப்படும். அகர்தலாவில் கட்டப்படும் வீடுகள், நியூசிலாந்து தொழில்நுட்பத்தில் எஃகுச் சட்டங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும். இது பெரிய நிலநடுக்க அபாயத்தை தாங்க கூடியது. லக்னோவில் கனடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பிளாஸ்டர் மற்றும் பெயின்ட் தேவை இல்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுவர்கள் மூலம் இந்த வீடுகள் விரைவாகக் கட்டப்படும்.  ஒவ்வொரு இடத்திலும் 12 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும்.  ஒவ்வொரு இடமும் நமது திட்டத் தயாரிப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு புதிய தொழில்நுட்பத்தையும், அனுபவத்தையும் கற்கும் மையமாக இருக்கும்.  இத்துடன், கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான திறனை மேம்படுத்த சான்றிதழ் படிப்பும் தொடங்கப்படும் எனவும்  அப்போது தான், வீடு கட்டுமானத் துறையில், உலகின் சிறந்த தொழில்நுட்பம் மற்றம் பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.  நம்நாட்டில் நவீன வீட்டுவசதித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஆஷா - இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார். இதன் மூலம், 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய மற்றும் மலிவான கட்டிடத் தொழில்நுட்பம் நாட்டில் உருவாக்கப்படும். இந்தப் பிரசாரத்தின் கீழ், ஐந்து சிறந்த தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார். நகரத்தில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப் பெரிய கனவு சொந்த வீட்டில் வசிப்பதுதான் என அவர் கூறினார்.  ஆனால், பல ஆண்டுகளாக, சொந்த வீட்டின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வந்தனர். நம்பிக்கை ஏற்பட்டாலும், அதிக விலை காரணமாக , வீடு வாங்குவது குறைந்தது. சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதாலும், மக்கள் நம்பிக்கை இழந்தனர். வங்கியின் அதிக வட்டி, வீட்டுக் கடன் கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவை  வீடு வாங்கும் ஆர்வத்தை மேலும் குறைத்தன. சாதாரண மனிதரும் சொந்த வீடு பெற முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகரங்களில், இலட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. புதுமை, உள்ளூர்த் தேவை, வீட்டு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை அமல்படுத்துவது ஆகியவற்றில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கவனம் செலுத்தியது என பிரதமர் கூறினார். ஒவ்வொரு வீடும் மின்சாரம், தண்ணீர், கேஸ் இணைப்பு பெற்ற வீடாக உள்ளது.  ஜியோ-டேக்கிங் மற்றும் பயனாளிகளுக்கு நேரடிப் பணப்பரி மாற்றத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. நடுத்தர மக்களின் பலன்கள் குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, வீட்டுக் கடன்களுக்கு அவர்கள் ...

ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவரம் செய்த விவகாரத்தில் SFI தலைவன் ஶ்ரீகாந்த் கைது!

ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் விஸ்டிரான் தொழிற்சாலையில் கலவரம் செய்த விவகாரத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (Students’ Federation of India - SFI) தலைவன் (President) ...

காமராஜர் இருந்தவரை தமிழ்நாடு அரசியலில் கொள்கை என்று ஒன்று இருந்தது இப்பொழுது ?

தமிழ்நாட்டு தேர்தல் ஒரு காலமும் கொள்கை சார்ந்து நடந்தது அல்ல, இங்கு காமராஜர் இருந்தவரை காங்கிரசுக்கு ஒரு கொள்கை இருந்தது அவரோடு அதுவும் சமாதியாகி அதிகாலை காகங்கள் ...

கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவா ?

கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் போடும்.. தமிழக ஊடகங்களுக்கு நாம் சில புள்ளி விபரங்களை தர விரும்புகிறோம். பஞ்சாயத்துகளை ...

ரஜினி கட்சி “மக்கள் சேவை கட்சி” என்றும், அக்கட்சியின் சின்னம் ஆட்டோ என்றும் நேற்று தகவல் பரவிற்று உண்மையா ?

இதில் பாதி உண்மை இருக்கலாம் என்கின்றார்கள், ரஜினியின் பட அறிவிப்பு தவிர எல்லாம் ஒருவித ரகசியமானவை என்பதால் அவராக அறிவிக்கும் வரை நம்ப முடியாது ஆம், ரஜினி ...

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது.

இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள் பயணமாகஉள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கம் செல்ல உள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார திட்டத்தை ...

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் இருந்தபோது நடந்தவை….

முன்னால் சிறைத்துறை DIG சொல்வதை கேளுங்கள் . சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ...

Page 12 of 16 1 11 12 13 16

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x