மோடியை விட தாலிபான்கள் பெஸ்ட்! தாலிபான்கள் தந்த சர்பத் சூப்பர்! இந்திய டுடே எடிட்டர் சர்தீப்!

ஆப்கான் மக்கள் தனது சொந்த நாட்டில் தனது சொந்த அதிகார வர்கத்தின் கீழ் வாழமாட்டேன் என்று நாட்டை விட்டே வெளியேறுகிறார்கள்.

ஒரு நாட்டிலிருந்து கும்பல் கும்பலாக மக்கள் வெளியேறி இன்னொரு முகம் தெரியாத அந்நிய நாட்டுக்கு வாழச் செல்லும் துயரைப் போல பிறிதொரு துயர் உலகில் வேறில்லை.

அதுதான் இன்று ஆப்கனில் நடந்து கொண்டிருக்கிறது. என்னதான் நம்பிக்கை வார்த்தைகள் அளித்தாலும் தலிபான்களை யாரும் நம்பத் தயாராக இல்லை.காரணம்அவர்களின் பழைய வரலாறு அப்படி.

இதை நம்ப மறுத்து இன்னமும் அவர்களை இஸ்லாத்தின் மிகக் கண்டிப்பான பின்பற்றாளர்கள் என்றும், ஆதலால் தாலிபான்களை பற்றிய பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் இங்கு சிலர் சொல்லிக் கொண்டு (நியாயமாக உளறிக் கொண்டு என்றுதான் சொல்லனும்) திரிகின்றனர்.

இந்தியாவில் நடுநிலை ஊடகங்கள் என சொல்லிக்கொண்டு நம் நாட்டை விமர்சிக்கும் ஊடகங்கள் பல உண்டு. இதில் தி இந்து, மற்றும் இந்தியா டுடே தான் முன்னிலை வகிக்கிறது.

இடது சாரி சித்தாந்தம் என்ற போர்வையில் நாட்டுக்கு எதிராக கருத்து சொல்வதில் முதல் ஆளாக நிற்பவர் இந்தியா டுடே எடிட்டர் சர்தீப் என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஆப்கானிலிருந்து இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஆஃப்கான் இஸ்லாமியர்களையும் இந்திய அரசு இன்று மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இந்த பிரச்சினையை கையாள்கிறது.

அனால் இங்குள்ள சித்தாந்தவாதிகள் என கூறிக்கொள்ளும் சிலர் இறையாண்மைக்கு எதிராக பேசிவருவதாக பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்தவகையில் இந்தியா டுடே சீனியர் எடிட்டர் மற்றும் பத்திரிக்கையாளாரான ராஜ் சர்தீப் தேசாய் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ நெட்டிசன்கள் அனைவரையும் கோவத்துக்கு

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “2012ல் மோடி எனக்கு ஒரே நாளில் இரண்டு நேர்காணல் கொடுத்தார். இரண்டாவது நேர்காணல் ஒரு பஸ்ஸின் பின்புறம் நடத்துனர் இருக்கை அருகே நடந்தது.

அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். என்னை அவர் கால்களுக்கருகில் அமர வேண்டியிருந்தது. இன்று அவர் பிரதமர். அதுவும் ஏழாண்டுகளாக. நான் இன்றும் அதே இடத்தில் அதே நிலையில்.

நான் 2001 மற்றும் 2002 காலகட்டத்தில் 9 – 11 தாக்குதல் முன்பாக ஒருமுறை பாக் அப்கான் எல்லையில் உள்ள பெஷாவரில் நான் சில தாலிபான்வாதிகளை சந்தித்தேன்.

அருமையான சந்திப்பு அவர்கள் எனக்கு நொறுக்கு தீனியும் சர்பத்தும் தந்தனர்” என அந்த வீடியோவில் கூறினார்.இவருக்கு எதற்கு பத்மஸ்ரீ பட்டம் அதை பிடுங்கிவிடுங்கள் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Exit mobile version