தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் சீனர்களையும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீதும் தற்கொலை படைத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஆப்கான் தலிபான்கள் வேறு பாகிஸ்தான் தலிபான்கள் வேறு டிடிபி இயக்கம் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள். இவர்களை இந்தியாவின் ரா அமைப்பு தான்வழி நடத்தி வருகிறது என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது.
பாகிஸ்தானை கைப்பற்ற நினைக்கும் சீனர்களுக்கு எதிராக தற்கொலை படை தாக்குதல் நடத்தி பல சீனர்களை பழி தீர்த்து இருக்கிறார்கள். தேவைப்பட்டால் பாகிஸ்தான் ராணுவத்தையும் தாக்குவோம் என்று அறிவித்தது
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பலுசி ஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வாகன த்தின் மீது மஸ்டுங் ரோடு செக் போஸ்ட அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் பல பாகிஸ்தானியர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்
மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் குவெட்டா மஸ்டுங் ரோடு சொஹானாகான் செக்போஸ்ட் அருகே வந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது மோதி குண்டு வெடிப்பை நடத்தியிருக்கிறார்.
இதற்கு பாகிஸ்தான் தலிபான்கள் அதாவது டிடிபி என்கிற தெரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பெற்றுள்ளது இருக்கிறது. டிடிபி அமைப்பு இந்தியாவின் ராவின் கருவிகள் என்று பாகிஸ்தான் கூறிக்கொண்டு இருக்கிறது.
ஆப்கானில் தலிபான்களை வைத்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க நினைத்த பாகிஸ்தானுக்கு அவர்கள் மண்ணிலேயே இந்தியா பாடம் கற்பித்துக் கொண்டு இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.