நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் உருவான படம் ஜெய் பீம். இது வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு நல்ல லாபம் சம்பாதித்துள்ளது சூர்யா குடும்பம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம் பல விமர்சனங்ளை சந்தித்தது. உண்மைகள் மறைக்கப்பட்டது யாரையோ கொண்டாடுவதற்காக உண்மை போராளிகள் மறைக்கப்பட்டன. உணமையான குற்றவாளி பெயரை சொல்லவில்லை என பல உண்மைகளை திரித்து எடுக்கப்பட்ட படம் தான் ஜெய் பீம்.
ஜெய் பீம் படம் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை இது குறித்து தினம் ஒருவர் கண்டன குரல்களை எழுப்பி வருகிறார்கள். நேற்று அன்புமணி இப்படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஒரு விவாதத்தில் இயக்குனர் பிரவீன் காந்த் ஜெய் பீம் படத்தினை வெளுத்து வாங்கிவிட்டார். ரட்சகன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர பிரவீன் காந்த்.
ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாக சித்தரித்தார்கள். இது வன்னிய சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஜெய் பீம் படம் விவாதத்திற்குள்ளளனது. தினம் ஒரு விவாதம், தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜெய் பீம் தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பிரவின் காந்த் பேச்சில் அனல் தெறித்தது.
விவாதத்தில் பிரவின் காந்த் பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் தீயாக பரவியது. அவர் பேசியது ; ஜெய் பீம் படம் சூர்யா நன்றாக நடித்துள்ளார். இயக்குனரும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் ஏன் எதற்காக வன்னியர் சமுதாயத்தை அதில் தவறாக சித்தரித்தார்கள். என்பது புரியவில்லை, தமிழகத்தில் 1 கோடிக்கும் மேல் தமிழகத்தில் உள்ளார்கள் அவர்களை ஏன் தவறாக சித்தரிக்கவேண்டும். மேலும் அவர் சினிமா துறையையும் சற்று காட்டமாக விமர்சித்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்ட் உருவாகி உள்ளது கிறிஸ்தவர்களை தவறாக காட்ட கூடாது, இஸ்லாமியர்களை தவறாக காட்ட கூடாது மேலும் சில சாதிகளை தவறாக காட்ட கூடாது. ஆனால் மற்றவர்களை போகிற போக்கில் குத்தி விட்டு செல்லலாம் என்ற பாணியை தமிழ் சினிமா தற்போது கடைபிடித்து வருகிறார்கள்.
தற்போது பெரிய அளவில் சாதிய பாகுபாடுகள் பார்ப்பதில்லை. 80,90 களில் இருந்த மாதிரி தற்போது இல்லை. அனால் சினிமா அசுரன் ஜெய் பீம் போன்ற படங்கள் சாதி வெறியை மீண்டும் தூண்டுவது போல் அமைகிறது.எதற்காக முடிந்து போன ஒன்றை கையில் எடுக்க வேண்டும் முடிந்தது முடிந்து விட்டது. அதை எடுப்பதால் மீண்டும் சாதி வெறியை தான் தூண்டும். அடுத்தவர்கள் வேதனையை வைத்து சர்ச்சை மற்றும் பதட்டத்தை உருவாக்கி அதில் சம்பாதிப்பது மிகப்பெரும் கேவலம் என தனது வேதனையை கொட்டி தீர்த்தார்.
பிரவீன் காந்தி பேசிய வீடியோ தற்போதுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.