பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே….. அனைவருக்கும் வணக்கம்.பத்திரிக்கைச் செய்தி புகழ்மிகு நோபிள் பரிசுபெற்ற அமெரிக்க இயற்பியலாளர் டாக்டர் ஃபிரிட்ஜோஃப் காப்ரா, ‘தி தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ என்ற தலைப்பில், 1975 ஆம் ஆண்டில், உலகமே வியக்கும்படி புதிய தத்துவத்தை தன் புத்தகத்தில் தந்தார். இந்தப் புத்தகம் இப்போது உலகம் முழுவதும் 23 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்துடன் துணை அணுத் துகள்களின் தாளத் துடிப்பை டாக்டர் கப்ரா அறிவியல் ரீதியாக இங்கே இணைக்கிறார். “ஒவ்வொரு துணை அணுவின் நகர்வும், ஒரு இயக்கம், துடிப்பு, மட்டுமல்ல, “ஒரு ஆற்றல் நடனம்” என்றும் அவர் வலியுறுத்துகிறார்; முடிவில்லாமல் உருவாக்கம் மற்றும் அழிவின் துடிக்கும் செயல்முறை.நவீன இயற்பியலாளர்களுக்கு, அவர் சொல்வது, சிவனின் நடனமும் துணை அணுவின் நடனமும் ஒத்திருக்கிறது. இந்து தொன்மவியல், பேசும் இத்தாண்டவம் முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய உருவாக்கம் மற்றும் அழிவின் தொடர்ச்சியான நடனம்; மற்றும், அனைத்து இயற்கை நிகழ்வுகளின் அடிப்படை” என்று அவர் கூறுகிறார்.
“நவீன இயற்பியல் தத்துவத்தில் தொடர்ந்து நடனமாடுவது மற்றும் அதிர்வுறும் இயக்கம் பிரபஞ்சத்தின் இயக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன, என்று நடனத் தத்துவத்தை விளக்குவதோடு நில்லாது சிதம்பரம் நடராஜரை நேரில் வந்து தரிசித்தும் வியந்துள்ளார்.அமெரிக்க இயற்பியல் ஆய்வாளர் டாக்டர் ஃபிரிட்ஜோஃப் காப்ரா நடராஜரின் தாண்டவத்தை அணுமின் இயக்கத்தோடு ஆய்வு செய்த்தோடு நில்லாமல் மிகப்பெரிய நடராஜர் சிலையை, ஜெனீவாவில் அமைந்துள்ள “EUROPIAN ORGANISATION FOR NUCLEAR REASERCH” என்ற “CERN” கட்டடித்தின் வாயிலில் ஒரு நடராஜர் சிலையையும் வடிவமைத்துள்ளார். நம் மொழி மதம் நம்பிக்கை சாராத அணுமின் ஆய்வாளர்களின் பார்வைக்கும், நம் திராவிட மாடலின் கீழ்த்தரமான பார்வைக்கும் எத்தனை வித்தியாசம்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற, திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத் தாண்டவத்தை, பாரதத் திருநாட்டின் பாரம்பரிய தத்துவத்தை பெரிதும் போற்றி மதிக்கிறோம். கீழ்த்தரமான சிந்தனைகளால், ஆளும் கட்சியின் ஆதரவுடன், இது போன்ற தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை சிதைப்பதை, அவமானப் படுத்துவதை, தமிழக அரசு எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறது?மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே திராவிட மாடலாக சிலர் கொண்டுள்ளனர்.பரபரப்புக்காகவும், விளம்பரத்திற்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் தொடர்ந்து இழிவுபடுத்துவதையே தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களை இந்த அரசு அனுமதிக்கிறதா? மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள், எப்படி காவல்துறையால் கைது செய்யப்படாமல் துணிச்சலாக தொடர்ந்து.
இதுபோன்ற நடவடிக்கைகளில் எப்படி ஈடுபடுகிறார்கள்?ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது?நடவடிக்கை எடுக்கத் தேவையான காலம் அவகாசம் கடந்த பின்னும் ஆளும் அரசு செயல்பட மறுப்பது ஏன்?அல்லது இச்சமூகத்தின் சகிப்புத்தன்மையைக் கண்டறிய இது நீங்கள் தேர்ந்தெடுத்த வழியா?தவறு செய்தவர்கள் உடனடியாக சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கும் தெய்வீகத்தை அவமதிப்பதை பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
நன்றி வணக்கம்!அன்புச் சகோதரன் அண்ணாமலை ..