குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் R.G ஆனந்த் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லங்களை இந்தியா முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் சென்னை, கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த R.G ஆனந்த் அவர்கள் கூறியதாவது ;
டில்லி குழுவினருடன் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திராவில், 22 இடங்களில் உள்ள சிறார் இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையை தொடர்ந்து, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்.
அன்பு ஜோதி இல்லம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இச்சம்பவத்திற்கு பின், மத மாற்றம் புகார்கள் அதிகளவில் வருகிறது.விரைவில், லாவண்யாவில் மதமாற்றம் வழக்கிற்கும் தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்கிறோம். கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தவறு. விருப்பத்தின் படி செய்துக் கொள்ளலாம். ஆனால், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மதமாற்றம் செய்யக் கூடாது என கூறினார்.