தமிழக காவல்துறையை கண்ணியமிக்க காவல்துறையாக செயல்படும் வகையில் காவல்துறையின் அமைச்சர், தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை மேம்படுத்த போதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்
தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சுட்டிக்காட்டும் பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தட்டிக் கேட்கும் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் மிரட்டப்படுவதும் அவர்கள் மேல் பொய் வழக்கு போடுவதும், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்படுவதும் தொடர் கதையாக நடைபெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தனி நபர் மீது சட்டத்திற்கும் புறம்பாக, உள்நோக்கத்துடன் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களுக்காக பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்து வருகின்றனர். சட்டத்திற்கு எதிராக செயல்படும் இது போன்ற போலீசார் மீது வழக்கு தொடர இனி அரசின் அனுமதி தேவையில்லை என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது.
மனித உரிமையை காக்கும் வகையில், நீதியை நிலை நாட்டும் வகையில், சட்டத்தின் ஆட்சி நடக்க, உச்ச நீதிமன்றம் பொது மக்களை அரசியல் சாசன சட்டப்படி பாதுகாக்கும் வகையில் வழங்கிய இந்த முக்கிய தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தும் வகையில், வலிமையாக தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறையினர் குறித்த வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க தனி நீதிமன்றத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
தனி நபர் மீது பொய் வழக்கப்படும் போலீசார் மீது வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு காவல்துறையினருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 197ம் பிரிவு அளிக்கும் பாதுகாப்பை, தங்களின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் அல்லது துஷ் பிரயோகம் செய்வதற்கு காவல்துறையினர் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் காவல்துறையினர் கடத்தியதாக ஒருவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அது தொடர்பாக நீதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் காவல்துறையினருக்கு எதிராக இந்த கருத்து தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் அரசியல் அழுத்தம் காரணமாகவும், ஆதாயங்களுக்காகவும் சட்டத்துக்கு புறம்பாக கைது செய்தால் பொதுமக்கள் போலீசார் மீது வழக்கு தொடரலாம். இதற்கு அரசு அனுமதி தேவையில்லை. என்று தீர்ப்பளித்துள்ளது. மக்களை காக்க வேண்டிய காவல்துறையினர், அரசியல்வாதிகளின் சேவகனாக ஆட்சி அதிகாரத்திற்கு அடி பணிந்து, லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு பல்வேறு ஆதாயங்களுக்காக, சட்டத்திற்கு புறம்பாக பொய் வழக்குகளை புனைந்து அப்பாவி மக்களை, நிரபராதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு முடிவு கட்டும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
கடைநிலை காவலர்கள் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி டிஜிபி வரை கடந்த காலங்களில் காவல்துறையினர் மீது பொய் வழக்கு, மனித உரிமை மீறல் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.
காவல்துறையின் மீது ஒரு தனி நபர் தான் சட்டத்திற்கு புறம்பாக பாதிக்கப்பட்டதன் பேரில் குற்றச்சாட்டு கூறினால், அந்த தனி நபர் காவல்துறையின் மீது வழக்கு தொடர அரசாங்க அனுமதி பெற வேண்டியது கட்டாயம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 197- 8ம் பிரிவு கூறுகிறது
எனவே பாதிக்கப்படக்கூடிய தனிநபர், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்காக, அநியாயமான கைது நடவடிக்கைக்காக, நீதி கேட்டு போராடும் பொழுது, கிரிமினல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 197 இன் படி காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தின்படி அரசாங்க அனுமதி பெற்று வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதால் மிகுந்த காலக தாமதமும் போராட்டங்களும் சந்திக்க வேண்டி இருப்பதால், பொதுமக்கள் தங்களுடைய நியாயத்தை நிலைநாட்ட முடியாமல் பாதிப்படைந்தனர். காவல்துறையினரின் தவறுகளும் அதிகமாகிக் கொண்டே இருந்தது,
இந்தியா முழுவதும் காவல்துறையினரின் இதுபோன்ற மக்கள் விரோத போக்கு குறித்து பல கண்டனங்களும் எதிர்ப்புக் குரலும் விவாதங்களும் நடந்து வந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.
தமிழக அரசு மக்களையும்,மனித உரிமையும், ஜனநாயகத்தையும் பேணிக் காக்கும் வகையில், தற்பொழுது அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம் அமைத்து விரைவாக நீதி கிடைக்க வழி செய்யப்பட்டது போல், அரசியல் சட்டப்படி முன் உதாரணமாக வாழ்ந்து, மக்களை காக்க வேண்டிய கண்ணியமிக்க காவல்துறையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் மீது பொய் வழக்கு போடுவது, ஊழல் மற்றும் பாலியல் புகார்களில் சம்பந்தப்பட்டு சட்டத்தை சீரழிக்கும் காவல்துறையினரின் வழக்குகளை விசாரிக்க தனி விசாரணை நீதிமன்றத்தை உருவாக்கி காவல்துறையினரின் கண்ணியத்தையும் மக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி நபர் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவை தமிழக காவல்துறையினருக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி , தமிழக காவல்துறையினர் நேர்மையாக சட்டப்படி செயல்பட வேண்டும் என்பதை தமிழக அரசு முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி அறிவுறுத்த வேண்டும்.
தனி மனித உரிமையை பேணிக் காக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை பொதுமக்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் தொலைக்காட்சி, மற்றும் ஊடகங்கள் மூலமாக படிப்பறிவில்லாத அடித்தட்டு ஏழை கிராம மக்களும் பொய் வழக்குகளால் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கப்படும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.
மேலும் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக செயல்பட்டு வரும் ஓய்வுபெற்ற கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு சமீபத்தில் திடீரென விலக்கி கொல்லப்பட்டு மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியானது. குடிமக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பேணி காக்கக்கூடிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசால் அவமதிப்பிற்கு உள்ளானது.
சமுகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனைகள், மனித உரிமை மீறல்களையும், அது தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும் மிக சிறந்த அமைப்பான மனித உரிமை ஆணையம் தலைவராக இருப்பவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாமல் மீறப்பட்டது
மூலம் காவல்துறையால் பொய் வழக்கு, உடல் ரீதியான மன ரீதியான சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு நீதி கேட்டு மனித உரிமை ஆணையத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் மட்டும் வழக்கறிஞர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வாக இந்த நிகழ்வு இருந்தது.
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதி அரசரும், ஒரு மாநிலத்தின் மனித உரிமையை பாதுகாக்க வேண்டிய மனித உரிமை ஆணைய தலைவராக செயல்பட்டு வருபவருக்கே, பாதுகாப்பு வழங்க முடியாத தமிழகஅரசு, ஒரு சாதாரண குடிமகனுக்கு எவ்வாறு மனித உரிமை பாதுகாப்பு வழங்கப்படும் மற்றும் தனிமனித உரிமை சுதந்திரம் எவ்வாறு பேணி பாதுகாக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூக நீதி மறுக்கப்படுவதின் அடையாளமாக இந்த நிகழ்வு இருந்தது. இது போன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் மறைமுகமாக மிரட்டப்பட்டாலும் நேரடியாக நீதிமன்றத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நீதி பெற முடியும் என்ற சூழ்நிலையை உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் உருவாக்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அற்புதமான தீர்ப்பின் நோக்கத்தை உணர்ந்து அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் காவல்துறைக்கு தலைவராக விளங்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் காவல்துறையை கண்ணியமிக்க , மனிதநேயமிக்க காவல்துறையாக மேம்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்,தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.