Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

தமிழக தேர்தல் களம் யாரால் மாறுகிறது….

Oredesam by Oredesam
December 11, 2020
in அரசியல், செய்திகள்
0
வேளாண் சட்டம் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர்! வினோஜ் ப செல்வம்
FacebookTwitterWhatsappTelegram

தமிழக தேர்தல் களம் இந்த முறை படுசுவாரசியமாக இருக்க போகிறது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மூலமாக ஆட்சியை இழந்த திமுக இந்த முறை நான்கு முனைப்போட்டியால் மறுபடியும் மண்ணை கவ்வ இருக்கிறது.

நான்கு முனைப் போட்டி என்றவுடன் அது ஏதோ அட்ரஸ் இல்லாத கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணியாக இருக்காது.

ஒவ்வொரு கூட்டணியும் குறைந்தது 10 சதவீதம் வாக்குகளை பெறக்கூடிய வகையிலேயே இருக்கும் .

இந்த முறை சீமான் தனியாக நிற்பது சந்தேகம் தான் சீமான் கமலுடன் கை
கோர்க்கும் நிலை உருவாகலாம். ஆரம்ப கட்ட வார்த்தைகள் துவங்கி விட்டது.கமல் கட்சி ஆரம்பித்த பொழுது அவர் வீடு தேடி
சென்று வாழ்த்தியவர் சீமான் என்பதால் கமல் சீமான் கூட்டணி தான் முதலில் உருகாக கூடும்.

கடந்த லோக்சபா தேர்தலிலேயே கமல் சீமான் தேமுதிக கூட்டணி உருவாக இருந்தது.ஆனால் அது ஏனோ அப்பொழுது உருவாக வில்லை. ஒரு வேளை கடந்த
லோக்சபா தேர்தலில பிஜேபி அதிமுக கூட்டணியை வழி நடத்தி இருந்தால் அப்பொழுதே உருவாகி இருக்கலாம்.

ஆனால் என்ன செய்ய? நேரம் ஒன்று
இருக்கிறது அல்லவா. அது இப்பொழுது தான் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றுவதற்கு தமிழக அரசியலை அமித்ஷாவின் கைகளில் அளித்து இருக்கிறது.

இந்த கூட்டணி உருவாகிய பிறகு அதில் தேமுதிக திருமாவளவன் வந்து இணை யக்கூடும்.இந்த கூட்டணி உருவானால் அசாதுதீன் உவைசியின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்க கூடும்.

சீமான் திருமாவளவன் தேமுதிக கூட்ட ணி வட மாவட்டங்களில் திமுகவை நிச்ச யமாக காலி செய்யும். கமல் சீமான் தேமு
திக திமுகவின் நகர்ப்புற ஓட்டுக்களை காலி செய்யும்.சீமான் திருமா உவைசி திமுகவின் முஸ்லிம் ஓட்டுக்களுக்கு வேட்டு வைக்கும்.

மொத்தத்தில் இந்த கூட்டணி சுமார் 10 சதவீத வாக்குகளை பெற முடியும் என்பதால் திமுக கூட்டணிக்கு முதல் வேட்டு வைக்கும் வேலையை கமலும் சீமானும் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

அடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணியும் உடைய வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்பதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்து விட்டது.

கடந்த வாரம் அறிவாலயம் வந்த குண்டுராவ்க்கு திமுக சிறந்த வரவேற்பு அளிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கூடாரம்
கவலையில் இருக்கிறது.40 தொகுதிகளை பெற காங்கிரஸ் மல்லுக்கு நிற்கிற து.

பதிலுக்கு திமுக 25 தொகுதிகளுக்கு மேல் 1 தொகுதியை கனவில் கூட உங்களுக்கு அளிக்க முடியாது .அதோடு 25 தொகுதிகளின் வேட்பாளர்களை யும் நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று பிர
சாந்த் கிஷோர் அறிவுரை படி கண்டிசன் போட ஆரம்பித்து விட்டது.

தொகுதி எண்ணிக்கையை விட இந்த கண்டிஷன் தான் காங்கிரஸ் தலைமையை கவலை கொள்ள செய்து இருக்கிறது.

திமுக கூட்டணி என்பதால் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையுடன் இப்பொ ழுதே பல காங்கிரஸ் பெரும் புள்ளிகள் பல கோடிகளை வைத்து கொண்டு காத்து இருக்கிறார்கள்.

அவர்களிடம் கிடைக்கும் தொகுதிகளை
கை மாற்றி விட்டு கிடைக்கும் பல கோடிகளை வைத்து அடுத்த தேர்தல் வரை வண்டியை ஓட்டி விடலாம் என்று கனவில் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆரம்பத்திலேயே வேட்பாளர்களையே நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று திமுக காங்கிரஸ் கட்சிக்கு இனிமா அளித்து விட்டது.

கமல் காங்கிரஸ்க்கு துண்டு போட்டு வைத்து இருந்தாலும் சீமானை பார்த்தாலே காங்கிரஸ் கட்சிக்கு ஆகாது என்பதால் திமுக கூட்டணி இல்லை என்றால் காங் கிரஸ் சசிகலா அதிமுகவை நோக்கி செல்வது தவிர்க்க முடியாதது.

அண்ணன் வைகோ அவர்களும் திமுக கூட்டணியில் நிச்சயமாக இருக்க மாட்டார் என்று உறுதியாக கூறலாம். ஏனென்றால் வைகோ கட்சி ஆரம்பித்த 1994 ல் இருந்து இதுவரை திமுகவுடன் லோக்சபா
தேர்தலில் 1999,2004,2019 என்று மூன்று தேர்தல்களில் கூட்டணி வைத்து இருக்கிறார்.

ஆனால் ஒரு ்தடவை கூட சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தது கிடையாது. மத்தியில் பிஜேபி திமுக கூட்டணியில் இருந்து கொண்டே 2001 சட்டமன்ற தேர்தலில் மதிமுகவை திமுக பிஜேபி கூட்ட ணியில் இணையாமல் தனித்து போட்டியிட்டு திமுகவின் தோல்வியை கண்டு
ரசித்தவர் வைகோ.

அதற்கு பிறகும் 2004 லோக்சபா தேர்த லில் திமுக காங்கிரஸ் கூட்டணியில்cஇணைந்த வைகோ 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் என்று கருணாநிதியிடம் சூடம் அடித்து சத்தியம் செய்து இருந்தார்.

ஏனென்றால் ஜெயல லிதா வைகோவை 2002ல் பொடாவில் கைதுசெய்து வேலூர் சிறையில் போட்டு இருந்தார்.

அப்பொழுது கருணாநிதி போய் வைகோ பார்த்து கண்ணீர் வடித்து தம்பி என்று ஒப்பாரி வைக்க பதிலுக்கு வைகோ அண்ணா என்று கதறி அழ வேலூர் ஜெயிலில்
இவர்கள் இரண்டு பேரும் சிந்திய கண்ணீர் இருக்கிறதே..சந்திப்பு படத்தில் சிவாஜி கூட அப்படி நடித்து இருக்க முடியாது.

ஜாமீன் வேண்டாம் கடைசி வரை ஜெயி லில் தான் இருப்பேன் என்று அடம் பிடித் த வைகோவை கெஞ்சி கூத்தாடி 2004 ல் சிறையில் இருந்து அழைத்து வந்த கருணாநிதி 2004 லோக்சபா தேர்தலுக்கு
அதிமுக பிஜேபி கூட்டணியை தோற்கடிக்க வைகோவை பயன்படுத்தி கொண்டார்

2004 லோக்சபா தேர்தலில் வைகோ பாமக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கள் என்று மெ கா கூட்டணி அமைத்து மெகா வெற்றி பெற்ற கருணாநிதி அந்த கூட்டணியை 2006 சட்டமன்ற தேர்தல் வரை கொண்டு செல்ல விரும்பினார்.அதற்காக வைகோ
வுடன் பல மேடைகளில் இணைந்து வைகோவின் பெருமைகளை அள்ளி விட்டுவந்தார்.

கருணாநிதி தம்பி என்பார் வைகோ அண்ணா என்று கண்ணீரோடு நிற்பார் கடைசியில் இந்த அண்ணன் தம்பி கண்ணீர் பாச நாடகம் வெறும் 10 தொகுதிக ளில் உடைந்து போனது. கருணாநிதி 25
தொகுதிகள் தான் என்று கூற பதிலுக்கு வைகோ வைத்தார் பாருங்கள் ஆப்பு
செமயாக இருந்தது.

திருச்சியில் மாநாடு நடத்தி கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை அறிவிக்க நினைத்த கருணாநிதி தம்பி வைகோ வுக்கு பெரிய கட் அவுட் வைத்து காத்து
இருக்க கடைசியில் கருணாநிதிக்கு பெப்பே காட்டி விட்டு வைகோ போயஸ் கார்டன்வாசலில் நின்றதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பாக இருக்கிறது

இதை யெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது வைகோ திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாதுஎன்பதக தான் லட்சிய மாக வைத்து இருக்கிறார் என்று அறிந்துகொள்ளலாம்.

அதனால் இந்த முறையும் வைகோ திமுக கூட்டணியில் இருக்க மாட்டார் என்று உறுதியாக கூறலாம்.வைகோ நிச்சயமாக சீமான் கமல் இருக்கும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பதால் அவரின் அடுத்த
சாய்ஸ் சசிகலா அதிமுகதான் இருக்க முடியும்.

சசிகலா அதிமுகவை நோக்கி காங்கிரஸ் வைகோ ஜபருல்லா இன்னும் பல சிறிய கட்சிகள் செல்லக் கூடும்.

2 ஜி வழ்க்கில் கனிமொழி ராஜா குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தால் திமுக கூட்டணியை விட்டு
கம்யூனிஸ்ட்களும் விலகி மாற்று வழி யை தேட ஆரம்பித்து விடுவார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப்போட்டி உறுதி.என்பதால் அதிமுக பிஜேபி ரஜினி எதிர்ப்பு. வாக்குகள் பிரி வதால் திமுகவினால் வருகின்ற சட்டம ன்ற தேர்தலில் வெற்றி பெறவே முடியாது..

அதற்கான முயற்சியை முன்னெடு த்து வருகிறார் கமல்.

கட்டுரை விஜயகுமார் அருணகிரி

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

எல்லையை தாண்டி வந்தா செஞ்சிடுவோம் – ராஜ்நாத் சிங் அதிரடி.

September 6, 2020
கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள்! அதிக நன்மை அடைய போகும் விவசாயிகள்!

கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள்! அதிக நன்மை அடைய போகும் விவசாயிகள்!

June 26, 2020

முத்து நகரில் இன்று இனிதே ஆரம்பமாகும் இந்து வியாபாரிகள் சங்கம்.

March 8, 2020
தி.மு.க போஸ்டருக்கு காவல்நின்ற போலீசார்!பா.ஜ.க விளம்பரத்தின் மீது தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டி அராஜகம்! பாஜக இளைஞரணியின் மீது கொலைவெறி தாக்குதல்

தி.மு.க போஸ்டருக்கு காவல்நின்ற போலீசார்!பா.ஜ.க விளம்பரத்தின் மீது தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டி அராஜகம்! பாஜக இளைஞரணியின் மீது கொலைவெறி தாக்குதல்

September 25, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x