நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை ஆளும் பா.ஜ.க நியமித்து தேர்தல் வேளைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.இதனை தொடர்ந்து இன்று முக்கிய அறிவிப்பை தேசிய பா.ஜ.க தலைமை அறிவித்துள்ளது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் துணை பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்திக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன், இணைபொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2014, 2017 இல் பீகார் மற்றும் உ.பி.மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் அரவிந்த் மேனன். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று முக்கிய தலைகளை பாஜக இறக்கியுள்ளது
யார் அந்த அரவிந்த் மேனேன். தற்போது தேசிய செயலாளராக இருக்கும் அமித்ஷாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவர். பாஜக இல்லாத மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தியவர். தெலுங்கானாவில் பாஜகவின் வளர்ச்சிக்கும் விதை போட்டவர். மேற்கு வங்கத்தில் அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அரவிந்த் மேனன், ஆர்.எஸ்.எஸ் லிருந்து பாஜகவிற்கு வந்தவர். அவர் 2014 இல் பீகாரில் பாஜகவின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தார், மேலும் 2017 இல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கும் இவர்தான் வழிகாட்டினார்.
சரளமாக பெங்காலி பேசும் மேனன், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்காளத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு கட்சி செய்யவில்லை. வாக்குச் சாவடிக் குழுக்கள் கூட இல்லை, இவர் அங்கு சென்றபிறகு பா.ஜ.க சிறப்பாகச் செயல்பட்டது. அரவிந்த் மேனன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரை தன தற்போது தமிழகத்தில் களமிறக்கியுள்ளது டெல்லி பா.ஜ.க
பாஜக நாடு முழுவதுமே தேர்தல் பணிகளை ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குமான, வேட்பாளர் பரிந்துரை பட்டியலை தயார் செய்யும்படி, மாநில தலைமைக்கு முன்கூட்டியே வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென்சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து, பாஜக ஏற்கனவே தீவிரமாக களப்பணி செய்து வருகிறது