பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை ! இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி, 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.பிரதமரின் கிஷான் திட்டத்தில் சேர நீங்க விவசாயியாக இருப்பது கட்டாயம்..ஆனா தமிழகம் முழுவதும் ஆதார் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை இடைத்தரகர்களிடம் யார் தந்தாலும் போதும் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் உடனே வந்து சேரும்.ஒவ்வொருவரிடமும் கமிஷன் தொகையாக தலா ஆயிரம் ரூபாயை இடைத் தரகர்கள் பெற்றுள்ளனர்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் இவர்கள் எல்லாம் சட்டவிரோதப் பயனாளிகள் விவசாயிகளோ அல்லது விவசாயக் கூலித் தொழிலாளர்களோ இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு விவசாயிகளுக்கான உதவித் தொகை கிடைத்திருக்கிறது.

விவசாயத்துறையை சாராதவர்களின் ஆவணங்களை வாங்கி, வங்கியில் போலி கணக்கு தொடங்கி, பிரதமரின் கிசான் திட்டத்தில் கமிஷன் பெறும் மோசடி தமிழகம் முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருந்தது..இதன் பின்னணியில் பெரும் கும்பல் செயல்படுகிறது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்தநிலையில் இதை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இறங்கியது! தமிழாக்கி முழுவதும் சுமார் 5 லட்சம் போலி விவசாயிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில் :

கிசான் திட்டத்தில் நடந்த, முறைகேட்டை கண்டுபிடித்தது, தமிழக அரசு தான். இதில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களில், 13 மாவட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.ஏற்கனவே இருந்த, 41 லட்சம் விவசாயிகள் எண்ணிக்கை, தற்போது, 46 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால், துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, விசாரணை நடந்தது.

முறைகேடு நடந்த இடங்களில் ஆய்வு செய்து, பணம் திரும்ப பெறப்படுகிறது. விவசாயிகள் தானாக பதிவு செய்யும் முறையால், இந்த முறைகேடு நடந்துள்ளது. தகுதியற்றவர்கள், ஐந்து லட்சம் பேர் என, தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட, 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 81 ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; 34 துறை அலுவலர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, 612 விவசாயிகளுக்கு, 145 கோடியே, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகமாக இழப்பீடு ‍தொகை பெற்றுத்தந்தது தமிழக அரசு தான். என பிரதமர் மோடியின் திட்டத்தால் அதிகம் பயனடைந்தது தமிழக விவசாயிகள் என முதல்வர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதுவம் புள்ளி விவரங்களோடு.

Exit mobile version