நிறைய நண்பர்கள் பிஜேபி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து நிற்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தமிழக
பிஜேபி தலைவர் பிஜேபி அதிமுக கூட்ட ணி சட்டமன்ற தேர்தலில் தொடரும் என் கிறார்.ஆக தமிழகத்தில் பிஜேபி சரியா
திசையில் தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதை அறிகிறேன்.
பிஜேபி வருகின்ற சட்டமன்ற தேர்தலை ரஜினி இரட்டை இலை சின்னத்துடன் கூடிய ஓபிஎஸ் அதிமுக,பாமக,புதிய தமிழகம் இன்னும் பல கட்சிகளின் துணை
கொண்டே சந்திக்கும் என்பதே 100 சதவீதம் நடைபெற இருக்கும் நிகழ்வு.
இந்த கூட்டணிக்கு ரஜினி தான் கேப்டன்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் மாதிரியே இந்த தேர்தலிலும் பிஜேபி பல கூட்டல் கழித்தல்களை செய்ய இருக்கிறது.
கடந்த தேர்தலில் பிஜேபி போட்ட கூட்டல் கழித்தலினால் தான் தேமுதிக அரசியிலில் செல்வாக்கை இழந்தது.
இந்த தேர்தலில் பிஜேபி போடும் கூட்டல் கழித்தலினால் முதலில் அதிமுகவும் அடுத்து திமுகவும் தமிழக அரசியலில் செல்வாக்கு இழக்கும்.
பொறுத்து இருந்து பாருங்கள்.
இன்றைய தமிழக அரசியல் களத்தில் திமுக அதிமுகவுக்கு அடுத்து மூன்றா வது இடத்தில் இருப்பது பிஜேபி தான்.
நியாயப்படி பார்த்தால் இப்பொழுது பி ஜேபி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது தேமுதிகதான்.
ஆனால் தமிழக அரசியலில் பிஜேபி மிக சரியாக திட்டமிட்டு தேமுதிகவை ஓரங்க ட்டிவிட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளது
என்பதை எத்தனை பேர் அறிவார்கள்.
நீங்களும் நானும் விவாதிக்கும் அரசியல் கொள்கை மற்றும் உணர்வு சம்பந்தப்ப ட்டது.
ஆனால் நமக்கு காரணம் புரியாமலே சில அரசியல் நிகழ்வுகள் நடைபெறும்.இதை closed door politicsஎன்று கூறுவார்கள்.
இதற்கு உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தான் விஜ யகாந்த் செல்வார் என்று அனைவரும் நினைத்து இருந்த நிலையில் அவர் மக்கள் நலக்கூட்டணிக்கு சென்று மண்ணை கவ்விய நிகழ்வினை கூறலாம்.
அரசியலில் முதல் இடத்தில் இருக்கும் க ட்சியும் இரண்டாவது இடத்தில் இருக்கும் கட்சியும் வருவரையொருவர் வீழ்த்திட மூன்றாவது இடத்தில் இருக்கும் கட்சியி ன் ஆதரவை தேடுவது வழக்கம்.
இதன்படி தான் 2011 ல் திமுகவை வீழ்த்த ஜெயல லிதா தேமுதிகவை கூட்டணியில் சேர்த்து க்கொண்டு வெற்றி பெற்றார்.
இதே மாதிரி 2016 தேர்தலில் திமுகவும் தேமுதிகவை இழுத்து வெற்றி பெற நி னைத்த பொழுது தமிழக அரசியலில் சாணக்கியர் என்று சொல்லப்பட்ட கலைஞர் பழம் நழுவி பாலில் விழக்காத்து
இருக்கிறது என்று விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வர இருப்பதை பற்றி பெருமையோடு கூறிக்கொண்டு இருந்தார்.
அந்த பழத்தை பாலில் விழ விடாமல் பா லிடாலில் விழ வைத்தது யார் தெரியுமா?
பிஜேபி தான்.தமிழக அரசியலில் திமு கவையும் அதிமுகவையும் அழிப்பது மிக கடினமான வேலை என்று அரசியல் அறி றிந்தவர்களுக்கு நன்றாகதெரியும். ஆ னால் மூன்றாவது இடத்தில் இருக்கும் கட்சியை மிகச்சுலபமாக காலி செய்து விடலாம்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வுடன் கிட்டதட்ட கூட்டணியை உறுதி செய்து விட்ட விஜயகாந்தை குழப்பி இப் பொழுது திமுகவுடன் சேர்ந்தால்அவர்கள்
ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள்..
இதனால் தமிழக அரசியலில் முதல் இடத்திற்கு வர நினைக்கும் உங்க ளால் மூன்றாம் இடத்தை விட்டு இரண்டா ம் இடத்திற்கு கூட வர முடியாது.
எனவே நீங்கள் மக்கள் நலக்கூட்டணிக்கு செல்லுங்கள் என்று விஜயகாந்தை அ ங்கு அனுப்பிவைத்ததே பிஜேபி தான்..
கூட்டணி பேச்சுவார்த்தை என்கிற பெ யரில் விஜயகாந்தை குறைந்தது 30 தடவை அப்போதைய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சந்தித்து பேசி இருப்பார்.
அதாவது பெரிய ஜீரோவான தேமுதிக வோடு தமிழ்நாட்டில் சிறிய ஜீரோவான பிஜேபி கூட்டணி வைத்தால் .
அதன் முடிவு ஜீரோவாகத்தான் இருக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்த நிலையில் பிஜேபி வேண்டுமென்றே விஜயகாந்தை கூட்டணி என்று பிடித்து வைத்து இருந்தது.
பிஜேபியின் நோக்கம் விஜயகாந்தை குழ ப்பி திமுகபக்கம் போக விடாமல் தடுத்து மக்கள் நலக்கூட்டணி பக்கம் அனுப்பி வைப்பது தான்.ஏனென்றால்அங்கு இருந்ததும் ஜீரோகள் தான் ஜீரோக்களோடு எத்தனை ஜீரோ சேர்ந்தாலும் முடிவு ஜீரோவா கத்தான் இருக்க முடியும்.
ஆனால் தேமுதிக என்கிற ஜீரோ அதிமுக அல்லது திமுகவோடு சேர்ந்து இருந்தால் தான்அதன் மதிப்பு 10 அல்லது 20 ஆக மாற முடியும்.
இது தேமுதிகவுக்கு
மட்டுமல்ல பிஜேபி காங்கிரஸ் பாமக,மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.
இது தான் உண்மையான அரசியல் இந்த அரசியலை அறிந்து இருப்பவர்களே தமிழகத்தில் தங்களின் கட்சியை அடுத்தக்
கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும்.
இதை பிஜேபி மிகத்தெளிவாக அறிந்து அரசியல் செய்தது.
பிஜேபியின் நோக்கம்
தமிழகத்தில் தேமுதிக மூன்றாவது இட த்தில் இருக்க கூடாது என்பதே.
இந்த இடத்தில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.
2016 சட்டமன்ற தேர்தலில்
விஜயகாந்தின் எதிரியாக ஜெயலலிதாதான் இருந்தார்.
அதனால் அதிமுகவை
வீழ்த்த திமுகவுடன் தான் கூட்டணி வைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள்
அனைவரும் கூறி வந்த நிலையில் அதை பொய்யாக்கி தேமுதிகவை மக்கள் நலக்கூட்டணிக்கு அனுப்பி வைத்தது பிஜேபி.
பிஜேபியின் ராஜ தந்திரத்தினால் வைகோ விரித்திருந்த வலையில் விஜயகா ந்த் விழ தேமுதிகவின் அரசியல் முடிந்து போனது..
இனி தலை குப்புற நின்று தண்ணீர் குடித்தாலும் தேமுதிகவினால் தமிழக அரசியலில் எழுந்து நிற்க முடியாது.
ஒரு வேளை விஜயகாந்த் கொஞ்சம் சுதா ரித்து திமுக கூட்டணிக்கு போய் இரு ந்து இருந்தால் தேமுதிகவை சுற்றி தான் இப்போதைய தமிழக அரசியல் சுற்றிக் கொண்டு இருக்கும் ஆனால் என்ன செய்ய முடியும்?
விதி வலியது அல்லவா..
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி நடத்திய அரசியலினால் தான் மூன்றா வது இடத்தில் இருந்த தேமுதிக வீழ்ந்து
அந்த இடத்திற்கு இப்பொழுது பிஜேபி வந்து இருக்கிறது.
மூன்றாவது இடம் என்பது வெறும் பேச்சளவில் இல்லாமல் அது
ஓட்டு சதவீத அளவில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு கூட்டணி கண்டிப்பாக வேண்டும்.
இந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெற்ற வெற்றி மாதிரி ஒரு வெற்றியை பெற்று தமிழகத்தில் அதிமுக திமுகவிற்கு அடுத்து மூன்றாவது சக்தி என்று நிரூபிக்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
அப்பொழுது தான் இரண்டாவது இடத்திற்கு செல்ல முடியும்.
தமிழக அரசியல் என்பது மிக நுட்பமானது.
இங்கேகுல கல்வி கொண்டு வந்த ராஜாஜியை முதல்வர்பதவியில் இருந்து நீக்க போராடிய திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர அதே ராஜாஜி முன் நின்ற வரலாறு இருக்கிறது.
இப்பொழுது இந்தி யாவில் பிஜேபி மத்தியிலும் பல மாநில ங்களிலும் ஆட்சியில் இருக்கிறது என்றா ல் அதற்கு முக்கிய காரணம் கூட்டணி
தான்.
1989 ல் விபிசிங் தலைமையில் உருவான ஜனதா தளத்துடன் பிஜேபி வைத்த கூட்ட ணி தான் இப்பொழுது பிஜேபியை மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கி இருக்கிறது என்பதை அரசியல் அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள்.
தமிழகத்தில் பிஜேபி ஆரம்பத்தில் இருந்தே மக்களை விட்டு விலகியே இருந்துள்ளது.
இனியும் அது வேண்டாம் கொள்கையை ஓரம் கட்டி வைத்து விட்டு கூட்டணி அரசியலை நோக்கி செல்வோம் அது தான் தமிழகத்தில் பிஜேபியை வேர்
விடச் செய்யும்….
கட்டுரை :- வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















