இந்து கடவுள்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளை தொடர்ந்து இழிவு படுத்தும் வகையில் பல்வேறு குழுவினர் தமிழகம் முழுவதும் இருக்கின்றனர், அவற்றில் ஒன்று தான் கறுப்பர் கூட்டம் என்ற ஒரு கூட்டம் இவர்கள் திக மூலம் செயல்படுவதாகவும், இவர்களுக்கு அரசியல் கட்சிகள் சிலர் ஆதரவு மற்றும் நிதி உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையதளத்தில் கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள், இந்து மத கடவுள்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் வீடியோவை வெளியிட்டு பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என ஞாயிறு அன்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தியதனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று நேரடியாக சென்று சட்ட ரீதியாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளும் இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் தமிழக காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















