தடுப்பூசி பற்றாக்குறை என பொய் சொல்லும் தமிழகம்! தடுப்பூசியை வீணாக்கியத்தில் 3 ஆம் இடம் பிடித்த தமிழகம்

இந்தியா முழுவதும் அதிக அளவில் கொரேனாா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழ்நாடு 15.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் இருந்து சற்று மீண்டு வர தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை விரட்ட ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டுமே என உலக சுகாதர மையம் அறிவித்துவிட்டது.

கடந்த மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்த வகையில் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை என ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வரும் சமூக வலைதள போராளிகள் இதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். மேலும் தமிழக சுகாதர துறை அமைச்சரே தடுப்பூசி 2 லட்சம் தான் கையிருப்பு என கூறினார். ஆனால் தமிழகத்தில் 14 லட்சம் தடுப்பூசிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகள் வீணாக்கும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீதமும், சட்டீஸ்கர் 30.2 மற்றும் தமிழகம் 15.5 சதவீத தடுப்பூசிகளை வீணடித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசிகள் வீணாகும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்திருக்க மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் அதிகளவு வீணாக்குகின்றன.

நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. அந்த வகையில், அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு இடங்களில் சட்டீஸ்கர் ( 30.2 சதவீதம்), தமிழகம் (15.5 சதவீதம்), ஜம்மு – காஷ்மீர் (10.8 சதவீதம்), மத்திய பிரதேசம் (10.7 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அதிகமாக தடுப்பூசிகளை வீணடித்துள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version