தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 2 கோடியே 8 லட்சம் குடும்ப அட்டைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 6.74 கோடி குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வகையிலான முகக் கவசங்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version