கடந்த வருடம் வரை கேரளாவில் எப்படி யாவது ஆட்சியை பிடித்து விட லாம் என்று கனவில் இருந்த பிஜேபி அது இப் போதைக்கு வேலைக்கு ஆகாது என்று லேட்டாக புரிந்து கொண்டு கேரளாவை விட தமிழகத்தில் விரைவாக ஆட்சியை பிடித்து விடலாம் என்கிற நம்பிக்கையுட ன் தமிழகத்தை நோக்கி பார்வையை தி ருப்பி விட்டது.
கேரளாவில் பிஜேபி ஒரு மிகப்பெரிய தவறை செய்து விட்டது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் கும்மணம் ராஜசேகரனை தலைவராக்கி கேரள பிஜேபியில் ஒரு எழுச்சியை உருவாக்கி விட்டு 30 மாதங்களில் கட்சியில் இருந்து தூக்கி விட்டு மிசோரம் மாநில கவர்னராக கொண்டு வந்தார்கள்.
பிறகு அதிலிலும் அவரை இருக்க விடா மல் ராஜினாமா செய்ய வைத்து மறுபடி யும் 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சிக்கு கொண்டு வந்தார்கள்.
ஆனால் அனைத்தும் ஊத்திகிடுச்சு குமண்ணம் போன பிறகு கேரள பிஜேபியில் இருந்த எழுச்சி இப்பொழுது இல்லை.
கேரளாவில் வேரூன்றி இருக்கும் ஈழவ நாயர் சாதி அரசியலில் நாயரான கும்மணம் ராஜசேகரனால் சாதிக்க முடியவில்லை என்றவுடன் அடுத்தும் நாயரான ஸ்ரீதரன் பிள்ளையை கொண்டு வந்தும்
அதுவும் முடியாமல் இப்பொழுது ஈழவரான சுரேந்திரனை கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இது கேரள பிஜேபிக்குள் இப்பொழுது உள்கட்சி பிரச்சனையை ஊதி பெரிதாக்கி விட்டது என்றாலும் காலப் போக்கில் இது சரியாகி விடும்.
ஏனென்றால் கடந்த தேர்தல்களில் பிஜேபிதலைவராக நாய ரை கொண்டு வந்துஈழவர்களின் அரசியல் அமைப்பான பிடிஜேஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கேரளாவில் காலூன்றி விடலாம் என்று நினைத்து இருந்தார்கள்.
ஆனால் ஈழவர்கள் இன்னும் இடதுசாரிக ள் மாயையில் இருந்து வெளியேறி.
பிடிஜேஎஸ் பக்கமாக வர விரும்பவில்லை என்பதை கடந்த 2019 லோக்சபா தேர்தல் மூலம் பிஜேபி புரிந்து கொண்டது.
அதனால் ஈழவர்களை பிஜேபியை நோக்கி நேரடியாக கொண்டு வர ஈழவரான சுரே ந்திரனை கட்சி் தலைவராக்கி இருக்கிறார்கள்.
ஈழவர்கள் இடதுசாரிகள் பிடியில் இருந்து வெளி வர வேண்டும் என்றால் அதற்கு முதலில் இடதுசாரிகள் கேரளாவில் பலம் இழக்க வேண்டும்.அதற்கு இந்த சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறது பிஜேபி.
ஏனென்றால் வருகின்ற சட்டம ன்ற தேர்தலில் இடதுசாரிகள் தோல்வி
அடைந்து காங்கிரஸ் ஆட்சி அமையும் பொழுது காங்கிரசில் இருந்து தலைவர்களும் இடதுசாரிகளிடம் இருந்து ஈழவர்களும் பிஜேபியை நோக்கி வருவார்கள்.
வரவழைக்க வேண்டும் இது தான் கேரள அரசியலில் பிஜேபி வைத்து இருக்கும் எதிர்கால திட்டம்.
பினராய் விஜயன் தான் இடது சாரிகளின் கடைசி முதல்வராக
இருக்க முடியும். ஏனென்றால் கேரளாவி ல் பிஜேபி இடது சாரிகளைத்தான் காலி
செய்ய இருக்கிறது.
வழக்கமாக கேரளாவில் ஒவ்வொரு 5 ஆ ண்டுகளுக்கும் ஒரு முறை ஆட்சி மாறி க்கொண்டே வருகிறது.இதுவரை கேர ளாவில் நடைபெற்றுள்ள 14 சட்டமன்ற
தேர்தல்களில் தொடர்ந்து 7 சட்டமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு 5 ஆண்டுகளு க்கு ஒரு முறை 35 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் நடைபெற்று கொண்டே இருக்கிறது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தான் முதல்முறையாக பிஜேபியின் வாக்கு சதவீதம் 6 சதவீதத்தில் இருந்த 15 சதவீ தமாக உயர்ந்தது.
வழக்கமாக எந்தவொ ரு தேர்தலிலும்ஆளும் கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வரும் எந்தவொரு எதிர்க்கட்சி யும் கடந்த தேர்தலில்தோல்வியடையும் பொழுது பெற்ற வா க்குகளை விட வெ ற்றி பெறும் பொழுது அதிக வாக்குகளை பெறுவது வழக்கமாகும்.
ஆனால் இடதுசாரிகள் 2011ல் ஆட்சியை இழக்கும் பொழுது வாங்கியது சுமார் 45 சதவீத வாக்குகள் .
ஆனால் 2016 ல் மீண் டும் ஆட்சியை பிடித்த பொழுது இடது சாரிகள் சுமார் 43 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தார்கள்.
இதன் மூலமாக இடதுசாரிகள் கேரளாவில் வலுவிழந்து கொண்டு இருக்கிறார்கள் என்று
அறிந்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் 2011ல் ஆட்சியை பிடி க்கும் பொழுது வாங்கிய 46 சதவீத வாக்குகளில் இருந்து சுமார் 7 சதவீத வாக்கு களை இழந்து 39 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.
ஆக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின்ஆன்ட்டி இன்கம்பன்சி ஓட்டுக்களான 7 சதவீத வாக்குகள் அப்படியே ஆட்சிக்கு வந்த இடதுசாரிகளுக்கு செ ல்லாமல் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலுவில்லாத பிஜேபிக்கு செல்கிறது என்றால் மக்கள் மாற்றத்தை விரும்பாது மதரீதியாக பிஜேபிபக்கம் நகர்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
அதே நேரத்தில் இடதுசாரிகள் இழந்த 2 சதவீதவாக்குகளும் பிஜேபி பக்கமே வந்ததால் பிஜேபி15 சதவீத வாக்குகளை பெற்றது.
ஆக காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளிடம் இருந்து வாக்காளர்கள் பி ஜேபியை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.
இப்பொழுது கேரள மாநிலத்தின் சாதி மத சமூகஅரசியலை சிறியளவில் பா ர்ப்போம்..
கேரளாவில் உள்ள சுமார் 3 கோடியே 50 லட்சம்மக்கள் தொகையில் சுமார் 27 சத வீதம் முஸ்லிம்கள் தான் அடுத்து சுமார் 18 சதவீதம் கிறிஸ்தவர்கள். இருக்கிறார்கள்.
இந்துக்கள் சுமார் 55சதவீதம் தான்
இருக்கிறார்கள். இதில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பெருமளவில் காங்கிரஸ் பக்கமும் இந்துக்கள் பெருமளவில் இடது சாரிகள்பக்கமும் இருந்து வருகிறார்கள்
ஆக பிஜேபிக்கு 45 சதவீத வாக்குகள் உடைய மைனாரிட்டிகள் ஓட்டுக்கள் உ றுதியாக கிடையாது என்பதால் பிஜேபிக்கு 55 சதவீத இந்துக்களிடம் இருந்து தான் வாக்குகள் வந்தாக வேண்டும்
அதுவும் இந்துக்களிடம் இருக்கிற சாதி வேறுபாடுகளை கடந்து தான் வரவேண் டும்.
இந்த 55 சதவீத இந்துக்களில் சுமார் 22 சதவீதம் ஈழவர்கள் மற்றும்அவர்களை சார்ந்த திய்யா என்கிற ஓபிசிக்கள்தான் இருக்கிறார்கள்.இவர்கள் தான் கேரளா வில்உள்ள இந்துக்களிடம் உள்ள மிக ப்பெரிய சாதிஅமைப்பாகும்.
இந்த ஈழவரகள் தான் இடது சாரிகளின் நம்பர-1ஓட்டு வங்கி.இந்த ஈழவர்கள் ஸ்ரீ நாராயண குருதர்ம பரிபாலன யோகம் (SNDP) என்கிற சாதிசார்ந்த சமூக அமைப்பை நடத்தி வருகிறார்கள்.கடந்த 2016 தேர்தலில் இந்த எஸ்என்டிபி அமைப்பு பாரதிய ஜனதர் மசேனா(BJDS) என்கிற அரசியல்இயக்கமாக உருமாறி பிஜேபி யோடு கூட்டணிவைத்து போட்டியிட்டது.
எஸ்என்டிபி அமைப்பின் அரசியல் நடவ டிக்கைபெரிய அளவில் வெற்றி பெற மு டியவில்லை என்றாலும் ஓரளவுக்கு இவ ர்களின் அரசியலால்தான் பிஜேபிக்கு 15 சதவீத வாக்குகள் கிடைத்தது என்று உறு தியாக கூறலாம்
அதாவது ஆளும்கட்சியாக ஆட்சிக்கு வ ந்த இடது சாரிகள் சுமார் 2 சதவீத வாக்கு களை பிஜேபியிடம் பறிகொடுக்க முக்கி ய காரணம் பிஜேடிஎஸ் கட்சியுடன் பிஜே பி வைத்த கூட்டணி தான்.
கேரள இந்துக்களில் ஈழவர்களுக்கு அடு த்து அதிகளவில் இருப்பவர்கள் நாயர்க ள் தான். கேரள மக்கள்தொகையில் சுமா ர் 15 சதவீதம் நாயர்கள் தான். கேரளா வில் உள்ள அரசியல் சூழ்நிலை என்ன வென்றால் ஈழவர்கள் என்ன முடிவு எடு க்கிறார்களோ அதற்கு நேர்திசையில் நாயர்கள் இருப்பார்கள்.
கேரள அரசியலில் நாயர்கள் இடதுசாரி களுக்கு எதிராக காங்கிரஸ் பக்கமே இருந்து வருகிறார்கள்.அதாவது ஈழவர் கள் இடது சாரிகள் ஆதரவாளர்கள் என்றால் நாயர்கள்அதற்கு நேர் எதிராக காங்கிரஸ் ஆதரவாளர்கள்.
ஈழவர்களை விட நாயர்கள் தான் இந்து மதத்தின் மீது பற்றுதலும் பக்தியும் கொண்டவர்கள். அதனால் அவர்களை பிஜேபி பக்கமாக சுலபமாக கொண்டு வரமுடியும்.இதனால் தான் சபரிமலை பிரச்சனையை பிஜேபி அரசியலாக்கி போராடியது.
இருந்தாலும் சபரிமலை பிரச்சனையில் இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்த இடதுசாரிகள் எக்காரணம் கொ
ண்டும் வெற்றி பெறக்கூடாது என்பதற்கா க பிஜேபிக்கு வெற்றி பெறும் அளவிற்கு வலுவில்லை என்கிற ஒரே காரணத்தி னால் 2019 லோக்சபா தேர்தலில் நாயர்கள் காங்கிரஸ் பக்கமாக முழுவதுமாக சாய்ந்தார்கள்.சபரிமலை போராட்டத்தில் பிஜேபிக்கு கிடைக்க வேண்டிய பலனை காங்கிரஸ் அறுவடை செய்தது.
அதே நிலை தான் இப்பொழுதும் இருக்கிறது.இடது சாரிகளை ஆட்சிக்கு வர விட க்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும்
நாயர்கள் மீண்டும் காங்கிரஸ் பக்கமாகவே சாய்வார்கள்.அதே நேரத்தில் காங்கி ரஸ் ஆட்சியை விரும்பாத ஈழவர்கள் பிஜேபியை நோக்கி வருவார்கள்.
இந்த நிகழ்வுக்காக தான் பிஜேபி காத்து இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஈழவர்களின் முழு ஆதரவையும் பிஜேபி பக்கமாக கொண்டு வர முயல வேண்டும்.இது தான் கேரள அரசியலை மாற்றும் சக்தியாகும்.
அதனால் தான் ஈழவரான சுரேந்திரனை பிஜேபி தலைவராக கொண்டு வந்து இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர்களை பிஜேபி பக்கமாக கொண்டு வந்து விடு வார்கள்.இது 2024 லோக்சபா தேர்தலு க்குள் நடைபெற்று விடும்.
காலம் காலமாக எதிர் எதிர் திசையில் இயங்கி வரும் ஈழவர்களும் நாயர்களும் ஒன்றாகஇந்துக்கள் என்கிற பெயரில் மீண்டும் கைகோர்க்கும் காலம் நெருங்கி வந்தால் மட்டுமே கேரளாவில் பிஜேபி யின் வெற்றி சாத்தியமாகும்..அதற்கான
காலமாக 2024 லோக்சபா தேர்தலாகவே இருக்கும்.
அதென்னப்பா? மீண்டும் கை கோர்ப்பா ர்கள் என்கிறாய்? அப்படி என்றால் நாய ர்களும் ஈழவர்களும்ஏற்கனவே கை கோ ர்த்துள்ளார்களா?என்று நீங்கள்கேட்டால் அதற்கு ஆம் என்றே பதில் கூறுவேன்
கேரளாவில் 2012 ம் ஆண்டில் நெய்யாட்டி ன்கராஎன்கிற சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்நடைபெற்றது. இந்த தே ர்தல் நேரத்தில் நாயர்களின் சமூக அமைப்பான NSS அமைப்பின் தலைவரான சுகுமாறன் நாயர் அவர்களும் ஈழவர்களி ன் சமூக அமைப்பான SNDP அமைப்பின் தலைவரான வெள்ளப்பள்ளி நடேசனும் இந்து ஒற்றுமை ஓங்குக என்று கை கோ ர்த்து நெய்யாட்டின்கரா சட்டமன்ற இடைத்தேர்தலில் பிஜேபிக்கு சப்போர்ட் செய் தார்கள்.
இதனால் என்ன நடைபெற்றது தெரியு மா? 2011 சட்டமன்ற பொது தேர்தலில் 6702 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த மார்க்சிஸ்ட்கம்யூனி ஸ்ட் கட்சி 6300 ஓட்டுக்கள் வித்தியாச த்தில்தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 2011 ல் வெறும் 6000 ஓட்டுக்களை வாங்கி இருந்த பிஜேபி 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 30 ஆயிரம்
ஓட்டுக்களை பெற்று இருந்தது.
இடதுசாரிகள் ஆட்சியில் இல்லா விட்டால் ஈழவர்கள் பிஜேபியை நோக்கி விரைவாக வர முடியும். ஈழவர்களின் சமய இயக்க
மான எஸ்என்டிபி தலைவரான வெள்ளபள்ளி நடேசனும் இடதுசாரிகள் ஆட்சியில் இல்லை என்றால் பிஜேபி பக்கமாக
தன்னுடைய முழு ஆதரவை திருப்பி விடுவார்.
அதனால் இந்த தேர்தலில் காங்கிரசை ஆட்சியில் அமர வைத்து அதன் நாயர் தலைவர்களை பிஜேபி பக்கமாகவும் இடது சாரிகளை ஆட்சியை இழக்க வைத்து அதன் ஆதரவாளர்களான ஈழவர்களை பி ஜேபிபக்கமாகவும் கொண்டு வருவது தான் இந்த கேரள சட்டமன்ற தேர்தலில்
பிஜேபியின் வேலை.
அமித்ஷா நினைத்தது நடக்குமா என்பதை வரும் காலங்களில் தான் தெரியும்.
கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.