தொழில் முன்னேற்றத்திற்கான, முதலீடுகளை பெருக்குவதற்கான, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான,தனிமனித வருமானத்தை பெருக்குவதற்கான, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிறக்க வைப்பதற்கான எந்த அறிவிப்பும் இன்றைய தமிழக நிதி நிலை அறிக்கையில் இல்லை.
செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், நிதி பற்றாக்குறையானது இடைக்கால நிதிநிலை அறிக்கையினை விட 17,276 கோடி அதிகரித்துள்ளது தமிழகத்தின் நிதி நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.
வருவாயை பெருக்க வழி தெரியாமல், செலவினங்களை குறைக்க மனமில்லாமல், மக்களை மேலும் கடன் சுமையில் தள்ளியிருக்கிறது இன்றைய நிதி நிலை அறிக்கை.மக்கள் நலத்திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பான்மையான திட்டங்கள் மத்திய அரசினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த வருட நிதிநிலை அறிக்கையின் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் அடிப்படையிலேயே, இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது, மத்திய அரசை சார்ந்தே தமிழக அரசின் திட்டங்கள் சென்றடைகிறது என்பதை உணர்த்துகிறது.
அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரதம், திறன் நகரங்கள் உள்ளிட்ட பல மத்திய அரசின் திட்டங்களை இந்த நிதி நிலை அறிக்கையில் காண முடிகிற அதே நேரத்தில், தமிழக அரசின் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமே.
ஆய்வுகளுக்கும், செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகம் உள்ள நிலையில், கட்டமைப்புகளை பெருக்க கூடிய எந்த திட்டங்களுக்கும் ஒதுக்கீடுகள் இல்லை என்பது பெரும் ஏமாற்றமே.சில நாட்களுக்கு முன்னால், கடந்த அரசின் மீது பல்வேறு குறைகளை சுட்டி காட்டி, மத்திய அரசின் மீது ஆதாரமற்ற விமர்சனங்களை ‘வெள்ளை அறிக்கை’ என்ற பெயரில் முன்வைத்த தமிழக நிதியமைச்சர் அந்த குறைகளை களைந்து தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்வதற்கான எந்த திட்டத்தையும் அறிவிக்காதது ஏன்?
அதற்கான வழி தெரியவில்லையா அல்லது சீர்திருத்தங்களை செய்வதற்கான தைரியம் இல்லையா என்பதை தமிழக நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, கடந்த கால ஆட்சியினரின் மீது பழி போட்டு தப்பிக்க நினைப்பது முறையல்ல.
நாராயணன் திருப்பதி,செய்தி தொடர்பாளர்,பாரதிய ஜனதா கட்சி.
அமெரிக்க ரிட்டர்ன் தமிழக நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் மத்திய பிஜேபி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையே தமிழில் எழுதி லேப்டாப் மூலமாக அவருக்கு தெரிந்த தமிழில் வாசித்து இருக்கிறார்.
ஜெயலலிதா மாதிரி மத்திய அரசின் திட்டங்களை வீம்புக்கு முடக்காமல் திமுக அரசு தங்களின் திட்டங்களாக கொண்டு வருகிறார்கள்..எப்படியோ மத்திய அரசின் வழியில் சென்றால் தமிழக மக்களுக்கு நல்லது தான்.