தமிழக அரசியலை ராஜ்யசபா தேர்தல் மாற்றுமா?

ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பி த்து விட்டது.இன்னும் ஒரு வா ரம் தான் அதாவது மார்ச் 13 வரை தான் மனுத்தாக்கல் செய்ய முடியும்.

திமுக 3 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதிமுகவோ யாருக்கு கொடுக்கலாம் என்று டாஸ் போட்டு பார்த்து வருகிறது.

அதிமுகவில் இருந்து 4 எம்பிக்கள் ரிடையர்டு ஆகும் நிலையில் இப்பொழுது அதிமுகவுக்கு 3 எம்பிக்கள் மட்டுமே கிடைக்க முடியும். அதிலும் பிஜேபி ஒன்றை எதிர்பார்த்து வருகிறது.


ஏற்கனவே ஒடிசாவில் ஆனானப்பட்ட நவீன் பட்நாயக் கையே சரிகட்டி ஒரு எம்பி பதவியை பிஜேபி பெற்றுவிடும் நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் அதிமுகவிலும் பிஜேபி 1 எம்பி பதவியை எதிர்பார்ப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.இதனால் அதிமுகவில் பஞ்சாயத்து ஓடிக் கொண்டு இருக்கிறது.

பிஜேபிக்கு எம்பி சீட்டா என்று அதிமுகவில் அதிர்வுகள் இருப்பதால் வாசனுக்கு இப்பொழுது எம்பி பதவி யை அளிக்க வைத்து அவரை பிறகு பிஜேபிக்கு கொண்டு வந்து விடலாம் என்று வாசனுக்கும் பிஜேபி ரெகமண்ட் செய்து கொண்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் தங்கமணி இருவரையும் டெல்லிக்கு அழைத்து அமித்ஷா ராஜ்ய சபா சீட் பற்றி பேசி இருக்கிறார்.

எனவே பிஜேபிக்கு அதிமுக ஒரு சீட் கொடுக்கலாம்.

தேமுதிக ராஜ்யசபை சீட்டை எதிர்பார்த்து வந்த நிலையில் அதிமுக கண்டு கொள்ளாததால் விரைவிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும்…

பிஜேபியின் B டீமாக இருக்கும் தேமுதிகவுக்கு பிஜேபி நினைத்து இருந்தால் 1 ராஜ்ய சபாசீட்டை அதிமுகவிடம் இருந்தே பெற்று தர முடியும்.

ஆனால் பிஜேபியின் நோக்கம் தேமுதிகவை அதிமுகவில் இருந்து வெளியேற்றி கமலுடன் கை பார்க்க வைக்க வேண்டும் என்பதே ..

கமல் தேமுதிக கூட்டணியில் எப்படியாவது காங்கிரசை கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.இதற்கான முழு முயற்சியையும் கமல் எடுத்து கொள்வார்.இந்த நிலையில் ராஜ்ய சபா தேர்தல் பற்றிய ஒரு அரசியல் நிகழ்வையும் கவனிக்க வேண்டும்.

திமுக அறிவித்துள்ள 2 ராஜ்ய சபா வேட்பாளர்களும் திமுக எம்எல்ஏ க்களை வைத்து மட்டும் வெற்றி பெறமுடியாது.

ஏனென்றால்
தமிழகத்தில் ஒரு ராஜ்ய சபா எம்பி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால் அவரு க்கு குறைந்தது 34 எம்எல்ஏக்களின் ஆதரவு
வேண்டும்

திமுக வின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெற 102 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் திமுகவிற்கு 98 எம்எல்ஏ க்கள் தான்
இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திமுகவின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயமாக திமுகவுக்கு தேவை.

ஆனால் திமுகவோ காங்கிரஸ் கட்சியின் ஆதரவையோ கருத்தையோ கேட்காமல் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ராஜ்யசபாவிற்கு தங்களுக்கு ம் ஒரு இடத்தை திமுக அளித்து இருக்கலாம். அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது என்று அறிவித்து இருக்கிறார்.

அதனால் அதிமுக பிஜேபி விருப்பப்படி வாசனை அறிவிக்கும் பட்சத்தில் அது திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் முடிவாகவே அமையும்.

ஒன்றும் இல்லாத தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி தர்மபடி அதிமு க ஒரு ராஜ்யசபா சீட் அளிக்கும் பொழுது காங்கிரஸ் ஆதரவு இன்றி 3 வது வேட்பாளர் வெற்றி பெற முடியாத நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு அந்த 3 வது இடத்தை அளித்து இருக்க வேண்டும் என்று பிரச்சனையை உண்டாக்கும்.

இந்த பிரச்சனையை அதிமுக மிகலாவமாக கையாண்டால் திமுகவின் 3 வது வேட்பாளர் தோற்கும் சூழ்நிலை உருவாகும். பிறகு இது வே காங்கிரஸ் திமுக கூட்டணி உடைய வழி வகுக்கும்.

அதிமுக புத்திசாலித்தனமாக செயல் பட்டாலோ இல்லை வாசன் புத்திசாலித்தனமாக காங்கிரஸ் ஆதரவு மூலமாக காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களையும் அவருக்கு ஆதரவாக திருப்ப முடியும்.

அரசியலில் எதுவேண்டும் என்றாலும் நடக்க லாம் பிஜேபி ராஜ்ய சபாவில் திமுக மாதிரி
எதிர்கட்சிகளுக்கு அதிக எம்பிக்கள் கிடைப்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


அதற்கு செய்ய வேண்டிய அனைத்து வேலை
களையும் செய்து வருகிறது.

வாசனுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதும் இதி ல் ஒரு அம்சம் தான்.காங்கிரஸ் திமுக உறவு
இப்பொழுது சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.

அதோடு இந்த ராஜ்யசபா தேர்தல் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்
பிளவு இன்னும் அதிகரித்துள்ளது.

இதை பயன் படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை வாசன் இழுத்து விட்டால் திமுக காங்கிரஸ் கூட்டணி முடிந்துவிட்டது.

இதெல்லாம் நடக்கனும்னு ஆசைப்படுகிறேன்
இது நடக்குமா நடக்காதா என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் ஒரே ஒரு விசயத்
தை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும் அது என்னவென்றால் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுகவோடு இருக்காது.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version