மருத்துவமனையில் உணவை எட்டி உதைத்து வார்டு பாயை தாக்கிய தப்லிக் ஜமாத் மாநாட்டினர்!

டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்ட பல முஸ்லிம்கள் நாட்டிலுள்ள பல்வேறு மசூதிகள் மற்றும் பள்ளிவாசலில் தங்கி உள்ளனர். இந்த ஜமாதியினர்கள் பயிற்சி அளிக்க மதராசாகளுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நிஜாமுதீன் மார்க்காஸ் ஒரு ஹாட்ஸ்பாட்டாக வெளிவந்த பிறகு, கான்பூரில் உள்ள பல ஜமாத்தினர்களுக்கு கொரோன நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்பிறகு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோன நோய் தோற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தப்லிக் ஜமாத்தினார்களின் ஒரு சிலரின் நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்கு உரியதாக உள்ளது. சுகாதாரப் பணியாளர்களிடமும், மருத்துவர்கள், காவல்துறையினர் மீது கல் வீசுவது மற்றும் உமிழ்வது ,நிர்வாகத்தினரிடமும் மோசமாக நடந்து கொண்டாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதில் ஒரு சில ஜமாத்தினர்கள் செவிலியர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுத்துகின்றனர் என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்டி லால்சந்தனி, “சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தப்லிக் ஜமாத்தின் உறுப்பினர்கள் சிலர் உணவை எட்டி உதைத்தோடு மட்டுமின்றி, வார்டு பாயையும் தாக்கி உள்ளனர்” என்று தெரிவித்தார்

Exit mobile version