குடி கெடுக்கும் குடியை திமுக அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் வானதி சீனிவாசன் எச்சரிக்கை

தமிழகத்தில் சாராய கடைகளை திறந்த ஒரே நாளில் 165 கோடிக்கு சாராயத்தை தமிழ் மக்களுக்கு திமுக அரசு விற்பனை செய்திருக்கிறது. 30 நாள்களுக்கு மேல் ஊரடங்கில் இருக்கும் சாமானியர்களிடம் இருக்கும் காசை அரசாங்கம் டாஸ்மாக் கடைகள் மூலம் பறிக்கிறது.

மூன்று விதமான பாதிப்புகள் மக்களுக்கு

நோய் தொற்று குறைந்ததாக அரசு சொல்லும் மாவட்டங்களில் டாஸ்மாக் சாராயக்கடைகளில் கூடும் அபரிமிதமான கட்டுபாடற்ற கூட்டத்தால் நோய் தொற்றும் இறப்பும் மீண்டும் அதிகரிக்க கூடும்.

சாமானிய மக்களின் அத்தியாவசிய சேமிப்பு, அன்றாடச்செலவினங்கள், குடும்பத்திற்கான வாழ்வியல் செலவீட்டு நிதியை டாஸ்மாக்கில் செலவு செய்ய வைப்பதன் மூலம் குடி நோயாளிகளின் குடும்பங்கள் பட்டினியில் விழுகின்றது

திமுக அரசே சொல்வது போல தமிழகத்தில் பெருகி வரும் கள்ளச்சாராயம் மற்றும் கலப்பட மது மூலம் சுகாதார கட்டமைப்பில் தேவையற்ற அழுத்தமும், சட்டம் ஒழுங்கு சீர் குலைவும் ஏற்படுவதோடு குடும்பத்தில் தேவையற்ற சண்டை , குடும்ப வன்முறையும் பெருகுகிறது.

குடி கெடுக்கும் குடியை திமுக அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

Exit mobile version