தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். கட்சிகளுடன் கூட்டணி கிடையாது – பாஜக அதிரடி !

கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியது. இதற்கிடையே 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக தெலுங்குதேசம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்கும் என்று ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தநிலையில், நேற்று டெல்லியில் பேட்டி அளித்த ஆந்திராவுக்கான பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுனில் தியோதர் கூறியதாவது:- தெலுங்கு தேசத்துடன் கூட்டணி கிடையாது.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை பொறுத்தவரை, ஆந்திர முதல்-மந்திரி என்ற முறையில் ஜெகன்மோகன் ரெட்டியை பிரதமர் மோடி சந்தித்தார். பகவான் கிருஷ்ணர் கூட துரியோதனனை பலதடவை சந்தித்துள்ளார்.

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டுமே குடும்ப அரசியல் மற்றும் ஊழல் கட்சிகள். இரண்டுமே எங்களுக்கு ஒன்றுதான். இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்று அவர் கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version