டீ செலவு 27 லட்சம் ரூபாய் ! கோவை மாநகராட்சி தாராளம், மொத்தமா 76 லட்சம் செலவாச்சாம்.

கோவை நகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தீப்பிடித்து எரிந்த நிலையில், அதாவது 12 நாட்களாக அந்த தீயை அணைக்க ரூ.76 லட்சத்து 70 ஆயிரத்து 318 செலவிடப்பட்டதாக அறிக்கை ஒன்று மாமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தீயை அணைக்க டீ செலவு 27 லட்சம் ரூபாயாங்கோ.. கோவை மாநகராட்சி தாராளம்.. மொத்தமா 76 லட்சம் செலவாச்சாம்.

குறிப்பாக உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றிக்கு மட்டும் ரூ.27.52 லட்சம் செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு, தேநீர் உள்ளிட்டவற்றுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு குப்பை கூடத்தில் நடந்த தீயை அணைக்க 76 லட்சம் ஆகுமா ? மக்களை பார்த்தால் ஏமாளியாக தெரிகிறது திமுக அரசுக்கு. மக்களின் வரிப்பணம் இதுபோல் ஊழல்வாதிகளால் சுரண்டப்பட்டால் மத்திய அரசு எப்படி தமிழக அரசுக்கு நிதி வழங்கும். சமீபத்தில் தமிழகத்திற்கு உலக வங்கி 3 ஆயிரம் கோடி வழங்கியது. அந்த பணத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

மொத்த செலவின விவரம்.

11 நாள் உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் – ரூ.27,51,678.

காலணிகள் – ரூ.52,348.

பெட்ரோல் – டீசல், ஆயில் – ரூ.18,29,731.

முகக்கவசம் – ரூ. 1,82,900.

போக்லேன், லாரி வாடகை – ரூ.23,48,661.

தண்ணீர் லாரி வாடகை – ரூ.5,05,000   

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version