நம் நாட்டுக்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானத்தை தருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இப்படியான சூழலில் மத்திய அரசின் எச்ஏஎல் நிறுவனம் சார்பில் நம் நாட்டின் விமானப்படையை வலிமைப்படுத்தும் வகையிலான தேஜஸ் இலகுரக விமானம் தயாரிக்கும் பணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட இந்தியா தயாராகி உள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வரும் நிலையில், 100 கிலோமீட்டர் தொலைவுக்கு இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட தேஜஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது.இந்த ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல விமானங்கள் இந்திய வான் படையில்இணைய உள்ளது.
நம் நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டவை மிகவும் முக்கியமானவை. இதனால் ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி என்பது ஒதுக்கப்படும்.நம் நாட்டை பொருத்தவரை பாதுகாப்பு துறைக்கு தேவையான போர் விமானங்கள், ஆயுதங்கள் உள்பட பல்வேறு ராணுவ தளவாடங்கள் தற்போது இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்து விட்டோம்.மேலும் பாதுகாப்பு துறையை பொறுத்தவரை நமக்கு உற்ற நண்பனாக இருப்பது ரஷ்யா தான். நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்கள் என்று பெரும்பாலானவை ரஷ்யாவில் இருந்து வாங்கி வருகிறோம்.
இந்த நிலையில் நம் நாடு பல ராணுவ தளவாடங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. இதனை தொடர ‛மேக் இன் இந்தியா’ திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். எச்ஏஎல் என்பது மத்திய அரசின் நிறுவனமாகும். நம் நாட்டுக்கு தேவையான போர் விமானங்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இப்போது தேஜஸ் எம்கே 1 ஏ ரக இலகு ரக தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
நம் ராணுவத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை தயாரிக்க கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன், 2021ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.மொத்தம், 48,000 கோடி ரூபாய் மதிப்பில், 83 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 2024, மார்ச் 31க்குள் நம் விமானப்படையிடம் முதல் விமானத்தை ஒப்படைக்க திட்டமிடப்பட்டது.
இந்த விமானத்தின் இன்ஜினை அமெரிக்காவின், ‘ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதற்கிடையே, புதிய இன்ஜின்களை ஒப்படைப்பதில் அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தியதால், இதுவரை நம் விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல்., நிறுவனம் ஒப்படைக்கவில்லை.இதை, நம் விமானப்படையின் தலைமை தளபதி அமர் பிரீத் சிங் வெளிப்படையாகவே பல முறை விமர்சித்தார். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தேஜஸ் மார்க் – 1ஏ போர் விமானத்தை, இம்மாத இறுதிக்குள் விமானப்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது 99 ஜிஇ -404 ரக இன்ஜினுக்காக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் ரூ.5,375 கோடிக்கு கடந்த 2021ல் எச்ஏஎல் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த இன்ஜினை அமெரிக்க நிறுவனம் வழங்காமல் தாமததித்து வந்தது. இதே இன்ஜின் போல் ரஷ்யாவின் இந்த யுனைடெட் இன்ஜின் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய விகே – 650 வி டர்போஷாஃப்ட் இன்ஜினையும் தயாரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் இலகுரக ஹேலிகாப்டர்களில் பொருத்த முடியும்.மேலும் கடந்த ஆண்டு நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ஏஎல் 31எப்பி இன்ஜின் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த இன்ஜின் என்பது SU -30 MKI ரக விமானங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதோடு விமான இன்ஜின் தயாரிப்பில் நம் நாடும் தன்னிறையை அடையும் வகையில் ஒப்பந்தம் என்பது மேற்கொள்ளப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..