மறுபடியும் தெலுங்கானாவில் அரசியல் யுத்தம் ஆரம்பிக்க இருக்கிறது. நாகர்ஜூ ன சாகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வர
இருக்கிறது.
நாகார்ஜூன சாகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த நோமுல நரசிம்மயா கடந்த 1 ம் தேதி இறந்து விட்டார்.
எனவே அங்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனாரெட்டி பிஜேபியில் இணைய இருக்கிறார்.
சரிப்பா அதனால் என்ன என்று கேட்கிறீ ர்களா..இந்த ஜனாரெட்டி இருக்கிறாரே அவர் யார் தெரியுமா? அவர் ஏற்கனவே 2009 மற்றும் 2014 சட்டமன்ற தேர்தலில் இந்த நாகார்ஜுன சாகர் சட்டமன்ற தொ குதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியி ட்டு வெற்றி பெற்றவர்.
ஆக அடுத்த தேர்தல் பரபரப்பு தெலுங்கா னாவில் ஆரம்பமாகி விட்டது என்றே கூறலாம் அனேகமாக அடுத்த மாதம் திருப்ப தி லோக்சபா தொகுதியுடன் நாகார்ஜூ னா சாகர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறலாம்.
என்னமோ தெரியவில்லை தெலுங்கா னா அரசியலை விட்டு விலக நம்மை கடவுள் விடமாட்டேன் என்கிறார். ஒரு வேளை பிஜேபி ஆட்சி தெலுங்கானாவில்
அமைந்த பிறகு தான் தெலுங்கானா அரசியலை விட்டு வெளிவருவேனோ என்னவோ..அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அமித்ஷாவின் அடுத்த பிளான் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கட்டுரை :-எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி