பூசாரி உயிருடன் எரித்து கொலை! கோவில்! நில ஆக்கிரமிப்பை தடுத்ததால் நடந்த கொடூர சம்பவம்!

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட கோயில் பூசாரி, உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபோத்ராவில் உள்ள புக்னா கிராமத்தில், கோவில் பூசாரியை 6 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றி உயிருடன் பூசாரியை கொளுத்தியுள்ளனர்.

, ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில், அரங்கேறி உள்ளது இந்த கொடூர சம்பவம் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட 50 வயது கோயில் பூசாரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க, நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பூசாரியை கொளவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளது/.

இந்த நிலையில் பூசாரி, பாபுலால் வைஷ்ணவ், தனது வாக்குமூலத்தில், அவரும் அவரது குடும்பத்தினரும் கிராமத்தில் உள்ள ஒரு ராதா கிருஷ்ணா கோயிலை கவனித்து வருவதாகவும், கோயிலின் பெயரில் ஒதுக்கப்பட்ட நிலத்தை விவசாயத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார்.

வியாழக்கிழமை, காலை 10 மணியளவில், குற்றம் சாட்டப்பட்ட கைலாஷ் ஒரு சிலருடன் வந்து நிலத்தில் தகரக் கொட்டகைகளை போடத் தொடங்கினார். வைஷ்ணவ் எதிர்த்தபோது, ​​அவர்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார், அங்கு அவர் வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வைஷ்ணவின் குடும்ப உறுப்பினர்கள் கொலைசெய்தவர்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர் நிலை விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்றும், கூறியுள்ளார்கள். மேலும் வைஷ்ணவின் குடும்ப உறுப்பினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

உத்திர பிரேதேசத்திற்கு சென்று போராடிய காங்கிரஸ் ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு குரல்கொடுக்காமல் இருக்கிறார். மேலும் கற்பழிப்பு நடக்கும்மாநிலங்களில் முதல் இடம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் தான் திமுக இதை பற்றி வாய்திறக்கவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தவறுகள் நடந்தால் அதை பற்றி வாய் திறக்க மாட்ட்டார்கள் பத்திரிக்கைகள். மேலும் ஊடங்கங்களும் இதைப்பற்றி பெரிதாக பேசுவதில்லை

Exit mobile version