இந்து மதத்தை அழிப்பது தான் நோக்கம் -திக அருள்மொழி வாக்குமூலம்.. இராம சீனிவாசன் வைரல் வீடியோ

தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் “சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பிரச்சாரம் செய்தார்.

‘டெங்கு, மலேரியா, கரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக் கூடாது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க தலைவர் வீரமணி சனாதானமும் இந்து மதமும் ஒன்றுதான் என்று பேசினார். அதை ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.

“சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றுதான் என்பதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உறுதிப்படுத்தினார். பின்னர், அதே கூட்டத்தில், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்

இந்த நிலையில் உதயநிதியின் பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை உதயநிதிக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.இந்த நிலையில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று 262 அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பெரும் விவாத பொருளான உதயநிதியின் பேச்சு தொடர்பாக தந்தி டிவியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பாஜக பொதுச்செயலாளர் இராம சீனிவாசனும் திராவிட கட்சியின் சார்பில் வழக்கறிஞர் அருள்மொழியும் பங்கேற்றார்கள்.அப்போது பேசிய பாஜக இராம சீனிவாசன் சனாதனமும் இந்து மதமும் ஒன்று தான் அதை அழிக்க வேண்டும் என்று வீரமணி கூறுகிறார்.அப்படியென்றால் வரும் தேர்தலில் இந்து மதத்தை அழிப்போம் என கூறி வாக்குறுதி கொடுத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் என கூறினார்.

இது குறித்து நெறியாளர் திக கட்சியின் அருள்மொழியிடம் இந்து மதத்தை ஒழிப்பது தான் திக கட்சியின் நோக்கமா என்ற கேள்விக்கு ஆம் இதிலென்ன சந்தேகம் என தி.க அருள்மொழி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து பாஜக பொதுசெயலாளர் இராம சீனிவாசன் தனது எஸ்க் பக்கத்தில்
இந்து மதத்தை அழிப்பது தான் திகவின் நோக்கம். திக அருள்மொழி வாக்குமூலம்
இந்த ஹிந்து விரோதிகளை ஒழித்தால் தான் தமிழகம் முன்னேறும் என பதிவிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Exit mobile version