பாஜக சார்பில் திருக்கோவிலூரில் விமர்சையாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.

Bjp Pongal

Bjp Pongal

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள தேவனூர் கூட்ரோடு பகுதியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமலையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மகளிர் அணியினர் பொங்கல் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சுற்றுப்புற சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் திருக்கோவிலூர் நகர பாஜக தலைவர் பத்ரி நாராயணன், மாவட்ட பொது செயலாளர்கள் சதாசிவம், முரளி, மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி, ஒன்றிய தலைவர்கள் அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான பாஜக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Exit mobile version