விடியல் அரசில் கொலை நகரமாகும் தலைநகரம்! தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ரவுடி நாகூர் மீரான் கொலை! பழிவாங்க பெட்ரோல் குண்டு வீச்சு!

தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி நாகூர் மீரானை கொலை செய்த அந்தோணி உறவினர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய உள்ளார்கள் நாகூர் மீரான் ஆதரவாளர்கள்.

திமுக ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. போதை பழக்கம் ரவுடிகளின் அட்டுழியம் என தமிழகம் தத்தளித்து வருகிறது. பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் சாதாரணம் ஆகிவிட்டது.

கொலை கொள்ளை சம்பவங்களால் பீதியடைந்து வந்த தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் தமிழகத்தின் தலை நகரத்தில் அரேங்கேறியுள்ளது.இது சென்னை மக்களிடேயே எ அச்சமடைய செய்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடியும் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென்சென்னை மாவட்ட துணை தலைவருமான நாகூர் மீரான் அவரது தோழி இல்லத்தில் வைத்து ரவுடி ராபினின் கூட்டாளிகள் 5 பேர் நாகூர் மீரானை வெட்டிக்கொலை செய்தனர்.

நாகூர் மீரான் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி ராபின்(27), பிரபாகரன்(26), விமல்ராஜ்(25), இருளா கார்த்திக்(26), காணிக்கைராஜ்(24) ஆகிய 5 பேர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பலியான நாகூர் மீரானின் கூட்டாளிகள் சிலர் கொலைக்கு பழி வாங்கும் விதமாக, பல்லாவரத்தில் உள்ள கொலையாளி ராபினின் உறவினர்களான அந்தோனி மற்றும் சகாயம் ஆகியோரை அறிவாளால் வெட்டி தாக்கி விட்டு, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர். இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த இருதரப்பும் கடந்த 10 ஆண்டுகளாக, ஆதம்பாக்கத்தில் ரவுடியாக வலம் வந்து கொண்டிருந்தனர். இருதரப்பிலும் யார் பெரிய ரவுடி என்பது குறித்து கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களுக்குள் கண்டிப்பாக மோதல் ஏற்படும் என்பதை உளவுத்துறை முன்பே தெரியபடுத்தி இருந்தது.

இருப்பினும் விடியல் அரசில் ரவுடிகளை அடக்குவதில் சுணக்கம் காட்டியது. நாகூர் மீரான் கொலையும் அதற்கு பழி வாங்க அரிவாள் வெட்டு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version