சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை பின் விளைவுகள் மோசமாக இருக்கும் !

உலகத்தின் முழுவதும் கொரோனா தொற்று புயல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனவினால் உயிரிழந்துள்ளார்கள். 25 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இந்த கொரோனா உலகின் வல்லரசு நாடனா அமெரிக்காவை சீர் குலைத்துள்ளது . கொரோனா சீனாவில் இருந்து பரவியது.அங்குள்ள இறைச்சி சந்தியில் இருந்து பரவியது என சீனா அறிவித்தது . ஆனால் அதில் பல பொய்கள் இருக்கிறது எனவும் சீனா வுகாண் நகரில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்தது பரவியது என தகவல்களும் வெளியாகி உள்ளது

கொரோனா வைரசால் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் கொரோனவால் அதிகபட்சமாக 7.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் வூஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்தே சீனா வெளிப்படையான தகவல்களை அளிக்கவில்லை என கூறிவந்த நிலையில் உலக சுகாதார அதன் வெளிப்பாடாக,சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், ‛கொரோனா வைரஸ் பரவ துவங்குவதற்கு முன் சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்தப்படாததால், ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறு. ஆனால் அவர்கள் தெரிந்தே பொறுப்பாளர்களாக இருந்தால், பின்விளைவுகள் இருக்க வேண்டும் என்பது உறுதி’ என்றார்.

என்ன மாதிரியான விளைவுகள் என்பது குறித்து டிரம்ப் விரிவாக குறிப்பிடவில்லை. கொரோனா விவகாரத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு முதலில் பாராட்டு தெரிவித்த டிரம்ப், திடீரென தடாலடியாக சீன வைரஸ் என குறிப்பிடவே, பதிலடியாக அமெரிக்க ராணுவம் தான் கொரோனா வைரஸை பரப்பியதாக சீனாவும் பரஸ்பரம் புகார் கூற, இருபெரும் பொருளாதார நாடுகளிடையே வார்த்தை மோதல் அதிகரித்து வந்தது.

மேலும் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவ துவங்கியதா என கேள்வி எழுப்பியுள்ள டிரம்ப், அது குறித்து தனது அரசு விசாரிக்க இருப்பதாவும், சீனாவின் கொரோனா இறப்பு விகிதம் குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version