சாட்டை துரைமுருகனை விடுவித்த நீதிமன்றம் ! வைரலான கருணாநிதியின் பாடல்! புலம்பும் திமுக!

Saattai

Saattai

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் துரைமுருகனை கைது செய்தனர்.. குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ; எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்த கட்சியைச் சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனை கண்டிக்கிறேன்.என கூறினார்

சாட்டை துரைமுருகன் குறித்து சீமான் கூறுகையில் : கருணாநிதி குறித்து கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடல் உள்ளது. நான் பாடல் பாடுகிறேன். என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். ‘கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி! சதிகாரன் கருணாநிதி!’ என நான் பாடுகிறேன் என்று சீமான் பாடல் பாடி காட்டினார். என் மீது முடிந்தால் வழக்குப்பதிவு செய்யுங்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா?. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுகள். அநாகரீக அரசியல், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசவே கூடாதா?. முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து ஸ்டாலின் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் பேசலாம். அது கருத்துரிமை. நாங்கள் பேசினால் அவமதிப்பா? கொந்தளித்தார் சீமான்

இதை தொடர்ந்து கருணாநிதி குறித்த பாடல் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவித்தார். இதனால் திமுகவினர் கடும் அப்செட்டில் உள்ளார்கள் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டது போல் ஆகிவிட்டது என புலம்பி வருகிறார்கள்

Exit mobile version