சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்தது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய சில புகைப்படங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டி படைத்துள்ளது. மாலத்தீவின் பொருளாதாரமே முடங்கும் சூழ்நிலையை உருவாகிவிட்டது. அதற்கு காரணம் மாலத்தீவு அமைச்சர்களின் இனவெறி பதிவே.
தெற்காசிய நாடான மாலத்தீவுகள் அதிபராக, மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு சமீபத்தில் பொறுப்பேற்றார். சீன ஆதரவாளரான இவர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் துவங்கினார்.
பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.மேலும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தகனர்.
இதன் காரணமாக 10,500 ஹோட்டல் முன்பதிவுகளும், 5,520 விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன ஆன்லைன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும், ‘ஈஸ் மை டிரிப்’ என்ற இணையதளம், மாலத்தீவுகள் விமான டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. லட்சத்தீவுகளுக்கான விமான டிக்கெட் முன்பதிவுக்கு முக்கியத்துவம் தர துவங்கியது.
மேலும் #BoycottMaldives என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இந்த நிலையில் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்தது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய சுற்றுலா பயணியரை நம்பியே மாலத்தீவு சுற்றுலாத்துறை இயங்கி வருகிறது.
இனி மாலத்தீவுகள் இந்தியாவுக்கு எதிரான இதே போக்கை கடைபிடித்தால் சீனாவிடம் கடன் வாங்கி தான்
காலம் தள்ள வேண்டிய நிலைமை உருவாகும்.
மேலும் மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன..இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.