இந்துக்கள் எடுத்த முடிவு… இண்டி கூட்டணிக்கு பேரிடி .. வெளிவந்த முக்கிய ரிப்போர்ட்..

மகாராஷ்டிரா ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களுடன் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது இதில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக மாகாராஷ்டிர சட்டசபை மற்றும் உத்திரபிரதேசம் ராஜஸ்தான் இடைத்தேர்தல்களில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக இந்த வெற்றியானது பாஜகவுக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. மேலும் வரப்போகும் தேர்தல்களிலும் இந்த வெற்றி பிரதிபலிக்கும்.

சட்டசபை மற்றும் இடைத்தேர்தலில் இண்டி கூட்டணிக்கு கிடைத்த தோல்வியை ஜீரணிக்க முடியாமல் புலம்பி தள்ளி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மக்கள் இண்டி கூட்டணியை இவ்வளவு தண்டிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் இண்டி கூட்டணியினர் எப்போதும் போல் பாஜகவுக்கு எதிராக மதவாத சாயத்தை பூச ஆரம்பித்தார்கள். சிறுபான்மையினர் ஓட்டு மொத்தமாக விழுந்துவிடும் இந்துக்கள் ஓட்டுக்கள் எப்போதும் போல் பிரிந்துவிடும் என்ற கணக்கில் தேர்தலை நோக்கி சென்றார்கள். எங்கு பார்த்தாலும் பா.ஜ.க இடஒதுக்கீட்டை அழித்து விடும் ஜாதி வாரி கணக்கெடுப்பு என மதவாதம் சாதிகள் குறித்தும் பிளவுவாத அரசியல் தான்இருந்ததே தவிர மக்கள் நலத்திட்டங்கள் குறித்தோ மாநில வளர்ச்சி குறித்தோ பேசவில்லை. மராத்தி யா குஜராத்தியாக என மாநில பிரச்சனைகளை தூண்டி விடும் நோக்கில் பிரச்சாரம் செய்தார் ராகுல் காந்தி.

ஆனால் இந்த முறை இண்டி கூட்டணியின் தேர்தல் யுக்தி மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது. மகாராஷ்டிரா மட்டுமல்ல இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது. பிரிவினைவாத அரசியலை சிறுபான்மை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பா.ஜ.க மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மஹாராஷ்டிராவில் 30 தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதேபோல் உத்தரப் பிரதேச மாநிலம், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள குந்தர்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஒரே ஒரு இந்து பாஜக வேட்பாளரான ராம்வீர் தாகூர் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து 11 முஸ்லிம் வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளார்கள். 9 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தலில் 7 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக.

ராஜஸ்தானில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் 5 இடங்களில் பாஜக வென்ற நிலையில் காங்கிரஸ் ஒரு சீட்டில் மட்டுமே வெற்றி பெற்றது.அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 3 பேரை 3ம் இடத்துக்கு தள்ளினர் சுயேட்சைகள்.

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட் , சட்டசபை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றிகளும் பாஜகவின் ஒட்டு சதவீதமும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இந்துக்களின் ஓட்டுகள் பார்க்கப்படுகிறது. இதுவரை சிதறிய ஓட்டுகள் ஒன்றிணைய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரேதேசத்தின் வெற்றி என்பது இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது சிறுபான்மையினரும் விழித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இனியும் பிரிவினைவாதம் பேசி மக்களை ஏமாற்றும் கட்சிகளை நம்ப இந்துக்களும் சரி சிறுபான்மையினரும் சரி ஏற்க தயாராக இல்லை

Exit mobile version