நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

தமிழ்நாட்டிற்கான ரயில்வே துறையில் வளர்ச்சி திட்டங்கள் போதியளவில் வேகமாக இல்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குத் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லதாலேயே ரயில்வே திட்டங்களை முடிக்க முடியவில்லை என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

நமது நாட்டில் முக்கியமான பொது போக்குவரத்தாக ரயில்வே இருக்கிறது. நாட்டின் எந்தவொரு முக்கிய பகுதிக்கும் ரயில்கள் மூலம் எளிதாகவும் குறைந்த செலவிலும் செல்லலாம் என்பதால் மக்கள் ரயில்களில் பயணம் செய்யவே அதிகம் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் இது தொடர்பான கேள்வியை எழுப்பியிருந்தார்.தமிழ்நாட்டிற்கான ரயில்வே துறை திட்டங்கள் குறித்து நேற்று புதன்கிழமை தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.

அதில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை கடந்த ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில் ரயில் வழித்தடம் அமைந்துள்ள பகுதிகளில் 235 மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைப்பதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.அதேநேரம் அதில் 82 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்குத் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் தான் இந்த திட்டங்கள் தாமதமாவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,”2014 முதல் தமிழ்நாட்டில் 747 ரயில் மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு மட்டும் 9 பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு, ரயில் தடம் அமைந்துள்ள பகுதியின் டிராபிக் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே மேம்பாலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் பல்வேறு நிலைகளில் மாநில அரசின் ஒப்புதல் அவசியமாகிறது. நிலம் கையகப்படுத்துதல், நிலம் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்வது ஆகியவற்றில் மாநில அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. லெவல் கிராஸிங் மூடுவது, ஆக்கிரமிப்பு அகற்றுவது ஆகியவற்றுக்கு மாநில அரசின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் எந்த திட்டங்களுக்கெல்லாம் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை.

முன்னதாக கடந்த ஜூலை 23ம் தேதி தமிழச்சி தங்க பாண்டியன் ரயில்வே தொடர்பாக வேறு ஒரு கேள்வியை அளித்திருந்தார். அதற்கு ரயில்வே அமைச்சர், தமிழ்நாட்டில் ரயில்வே பணிகளுக்காக 4315 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாகவும் இருப்பினும், அதில் 24% அதாவது 1038 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ரயில்வே திட்டங்களுக்குத் தமிழக அரசு விரைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version